சபா நாயகன்: போர் தொழில் வெற்றிக்குப் பின் அசோக் செல்வனின் அடுத்த அட்டகாசமான படைப்பு... சர்ப்ரைஸாக வந்த சீமக்காரியே வீடியோ பாடல்!

அசோக் செல்வனின் சபா நாயகன் பட சீமக்காரியே வீடியோ பாடல்,Ashok selvan in saba nayagan movie seemakaariye video song | Galatta

தொடர்ந்து ரசிகர்களுக்கு வெரைட்டியான கதாபாத்திரங்களில் நடித்து மகிழ்வித்து வரும் நடிகர் அசோக் செல்வன் மற்றொரு புதிய வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சபா நாயகன் திரைப்படத்திலிருந்து சீமக்காரியே எனும் கலக்கலான பாடலின் வீடியோ பாடல் வெளியானது. பிரபல இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் இசையில் சஞ்சித் ஹெக்டே பாடி இருக்கும் இந்த சீமக்காரியே பாடலை முன்னணி பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுதியிருக்கிறார். பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவனாக இளமையான தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த சபா நாயகன் திரைப்படத்தின் சீமக்காரியே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கலக்கலான அந்த வீடியோ பாடல் இதோ…

அறிமுக இயக்குனர் CS.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகும் சபா நாயகன் படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.மேகா ஆகாஷ் மற்றும் கார்த்திகா முரளிதரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, தங்கதுரை, உடுமலை ரவி, அருண்குமார், ஜெயசீலன் சிவராம், ஸ்ரீ ராம் க்ரிஷ், செர்லின் சேத், அக்ஷயா ஹரிஹரன், துளசி சிவமணி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர்கள் சுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த சபா நாயகன் திரைப்படத்திற்கு கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்திருக்கிறார் ராஜூ சுந்தரம், பிருந்தா மற்றும் லீலாவதி ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ள சபா நாயகன் படத்திற்கு பில்லா ஜெகன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

 

தனக்கென தனி பாணியில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த மாடர்ன் லவ் சென்னை எனும் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆந்தாலஜி வெப் சீரிஸில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். முன்னதாக தெகிடி படத்திற்கு பிறகு தனது திரை பயணத்தில் மற்றொரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் படமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இந்த 2023 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.

இதனிடையே இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் உடன் இணைந்து அசோக் செல்வன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த ப்ளூ ஸ்டார் திரைப்படத்தை இந்த டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்சமயம் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் உடன் இணையும் அசோக் செல்வன் புதிய “கேங்ஸ்” வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த வெப் சீரியஸ் இன் படப்பிடிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசி பெற்று தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.