தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். கடந்த 2015-ம் ஆண்டு டம்மி டப்பாசு எனும் படம் மூலம் அறிமுகமானவர், அதைத்தொடர்ந்து ஆண் தேவதை படத்தில் நடித்தார். ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படத்தில் மல்லிகாவாக இவரது நடிப்பு பலரது பாராட்டுக்களை பெற்றது. 

இருப்பினும், அவரது போட்டோஷூட் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான பிறகு அதிக புகழ் பெற்றார். இந்த படங்கள் ரம்யா பாண்டியனை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக்கியது. இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார், இதுவும் அவருக்கு ரசிகர்களை மேலும் அதிகமாக்கியது. 

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து அவரது திறமையை வெளிப்படுத்த தயாராகிவிடார் ரம்யா. இவரை இன்ஸ்டாகிராம் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டிய நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் லைவில் தோன்றினார். ரசிகர்களின் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

உங்களது எதிர்கால திட்டங்கள் குறித்து கூறுங்கள் என்று ரசிகர் கேட்க, அதற்கு சூர்யாவின் 2டி நிறுவனத்திற்காக ஒரு படத்தையும், தயாரிப்பாளர் சி.வி.குமாரின் பேனரில் மற்றொரு படத்தையும் செய்கிறேன். வெப் சீரியஸ் ஒன்றிலும் நடிக்கிறேன். நிலைமை சாதாரணமாக இருந்திருந்தால் இந்தப் படங்களில் படப்பிடிப்பு இப்போது தொடங்கியிருக்க வேண்டும். கொரோனா காரணமாக அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். ஹீரோயினாக இல்லாமல் பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தெரியும் ரம்யாவிற்கு அதிக படங்கள் வந்து சேரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian) on