RRR படத்தின் புதிய விறுவிறுப்பான டீஸர் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | October 22, 2020 11:47 AM IST

பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமா அளவுக்கு இந்திய படங்களும் இருக்கும் என்று சவால் விட்டவர் இயக்குனர் ராஜமௌலி.பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் RRR.பெரிய பட்ஜெட்டில் சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.ஹிந்தியில் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்ட ஒரு வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக இருந்தது.
கொரோனா காரணமாக தள்ளிபோடப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.Jr NTR நடித்து வரும் பீம் என்ற கேரக்டரின் டீஸரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Bigg Boss 4 Tamil Latest New Promo | Housemates debate task | Ramya Pandian
22/10/2020 12:16 PM
Tulu actor, rowdy-sheeter Surendra Bantwal found dead in his house in Karnataka
22/10/2020 11:54 AM
Rajamouli's RRR - New Mass Action Packed Teaser | Jr NTR | Ram Charan
22/10/2020 11:43 AM
OFFICIAL: Jiiva's next is a rom-com, Super Good Films' 91st production venture
22/10/2020 10:51 AM