விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்த தொடர் ராஜா ராணி.இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமானவராக மாறியவர் ஆல்யா மானசா.இந்த தொடரில் நடித்து இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடரின் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆல்யா மானசா.

இந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ராஜா ராணி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் திருமணம் சீரியலில் நடித்த சித்து  ஹீரோவாக அசத்தி வருகிறார்.ஆல்யா மானசா இந்த தொடரிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ப்ரவீனா,அர்ச்சனா,பாலாஜி,வைஷு சுந்தர்,நிஹாரிகா என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.350 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக வெற்றிகரமாக சென்று வருகிறது.

விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடரில் இருந்து ஆல்யா மானசாவின் அண்ணனாக நடித்து வந்த நடிகர் மணி விலகியுள்ளார் இவருக்கு பதிலாக பிரபல நடிகர் இணைந்துள்ளார்.இவரது எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பை தொடங்கியுள்ளன.

raja rani 2 serial popular actor replaced siddhu alya manasa archana vj