விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இணைந்து நடித்த இந்த சீரியல் பெரிய ஹிட் அடித்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிரவீன் பென்னட் இந்த தொடரை இயக்கி வருகிறார்.ஆல்யா மானசா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.திருமணம் தொடரின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த சித்து இந்த தொடரில் ஹீரோவாக நடித்து அசத்தி வருகிறார்.

பிரவீனா,சைவம் ரவி,VJ அர்ச்சனா,VJ பிரத்து,பாலாஜி,வைஷு சுந்தர்,நவ்யா சுஜ்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் 200 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நவ்யா சுஜ்ஜியின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது,இவரது புதிய கணக்கின் தகவல்களை இவர் உடன் நடிக்கும் நபர்கள் பகிர்ந்து வளர்கின்றனர்.

raja rani 2 serial actress navya sujji instagram account hacked