ஆர்யாவின் பக்கா ஆக்ஷனில் வரும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... அதிரடியாக வந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு! புதிய மாஸ் GLIMPSE இதோ

ஆர்யாவின் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,arya in kathar basha endra muthuramalingam release date announcement | Galatta

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியில் பக்கா கமர்சியல் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் M.முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கேப்டன். நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக், டெடி என வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த கேப்டன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்த நிலையில், அடுத்ததாக கடந்த 2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான FIR திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். சர்தார் படத்தின் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Mr.X படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக மக்களின் ஃபேவரட் படமாக வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாராகும் சார்பட்டா 2 திரைப்படத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்துடன் மீண்டும் ஆர்யா இணைய இருக்கிறார். சமீபத்தில் சார்பட்டா 2 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்ட படைப்பாக இயக்குனர் சுந்தர்.சி இயக்கத் திட்டமிட்டிருந்த சங்கமித்ரா திரைப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், தற்போது அத்திரைப்படத்தை மீண்டும் இயக்குனர் சுந்தர்.சி கையில் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே முதல்முறையாக இயக்குனர் M.முத்தையா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.

தனது கொம்பன், மருது, விருமன் வரிசையில் இயக்குனர் M.முத்தையா உருவாக்கியுள்ள காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில், வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி கதாநாயகியாக நடிக்க, இளைய திலகம் பிரபு, பாக்யராஜ், சிங்கம் புலி, ஆடுகளம் நரேன், தமிழ், மதுசூதன ராவ், அவினாஷ், RK.விஜய் முருகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்ய, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்டண்ட் இயக்குனர் அனல் அரசுவின் அதிரடி ஆக்ஷனில் உருவாகி இருக்கும் காதர் பாட்ஷா படத்திற்கு பாபா பாஸ்கர் ஷோபி, சாண்டி, ஜானி, சதீஷ் மற்றும் ஷெரிப் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் காதல் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் வினா தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Namma satham indha time konjam extra'va irukum. Because we are going to witness @arya_offl in a mass action-entertainer directed by @dir_muthaiya for the first time!!! 🔥

#KEMTheMovie #KatharBashaEndraMuthuramalingam releasing worldwide on June 2nd. pic.twitter.com/HtFe1CSb2e

— Zee Studios South (@zeestudiossouth) May 13, 2023

‘நான் 10கிலோ இவர் 12கிலோ எடை குறைத்தோம்!’- பா.ரஞ்சித்தின் ஸ்போர்ட்ஸ் பட அனுபவங்களை பகிர்ந்த சாந்தனு - ப்ரித்வி! வைரல் வீடியோ
சினிமா

‘நான் 10கிலோ இவர் 12கிலோ எடை குறைத்தோம்!’- பா.ரஞ்சித்தின் ஸ்போர்ட்ஸ் பட அனுபவங்களை பகிர்ந்த சாந்தனு - ப்ரித்வி! வைரல் வீடியோ

தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

சூர்யாவின் மிரட்டலான ஆக்ஷன் ட்ரீட்டாக தயாராகும் கங்குவா... கொடைக்கானல் படப்பிடிப்பு குறித்து வெளிவந்த செம்ம மாஸ் அப்டேட் இதோ!