ராகவா லாரன்ஸின் மிரட்டலான நடனத்தில் ருத்ரன் பட புது ட்ரீட்... ட்ரெண்டாகும் ஜொர்த்தால வீடியோ பாடல் இதோ!

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ஜொர்த்தால வீடியோ பாடல்,raghava lawrence in rudhran movie jorthale video song out now | Galatta

தனக்கென தனி பாணியில் பக்கா மாஸ் திரைப்படங்களை இயக்கி நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த ராகவா லாரன்ஸ், தனது ஃபேவர்ட்டான காமெடி திரைப்படங்களான முனி காஞ்சனா சீரிஸ் படங்களில் அடுத்த படமாக காஞ்சனா போல் திரைப்படத்தின் கதையை தற்போது எழுதி வருகிறார். முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் இறுதி கட்ட படிப்பு முழு பேச்சில் நடைபெற்று வருகிறது இன்னும் மூன்று பாடல்களும் ஒரு சண்டைக் காட்சியும் படமாக்கப்பட வேண்டி இருக்கும் நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது  பாகத்தில் ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக களமிறங்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். FIVE STAR CREATIONS LLP நிறுவனத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்களின் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ருத்ரன் திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது ருத்ரன் திரைப்படத்தின் ஜொர்த்தால வீடியோ பாடல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஜொர்த்தால எனும் கானா பாடல் ருத்ரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. OFRO இசையமைத்துள்ள இந்த பாடலை பிக் பாஸ் அசல் கோளார் எழுத, OFRO, அசல் கோளார் & MC விக்கி இணைந்து பாடியுள்ளனர். ராகவா லாரன்ஸின் துள்ளலான நடனத்தில் இந்த ஜொர்த்தால வீடியோ பாடல் தற்போது வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்த பாடல் இதோ…
 

நான் நேற்று வந்த இயக்குனர்... AK62 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும்!- மகிழ் திருமேனி பற்றி மனதிலிருந்து பேசிய விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ
சினிமா

நான் நேற்று வந்த இயக்குனர்... AK62 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும்!- மகிழ் திருமேனி பற்றி மனதிலிருந்து பேசிய விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
சினிமா

பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!

வண்டியின் வேகம், சாப்பாட்டின் அளவு குறைகிறது... உயிர் - உலக் வருகையால் நிகழும் மாற்றங்கள் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

வண்டியின் வேகம், சாப்பாட்டின் அளவு குறைகிறது... உயிர் - உலக் வருகையால் நிகழும் மாற்றங்கள் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடியோ