"பேசுவதற்கு நிறைய இருக்கிறது!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் த்ரிஷா கொடுத்த லியோ பட மாஸ் அப்டேட்! விவரம் இதோ

பொன்னியின் செல்வன் 2 மேடையில் த்ரிஷா கொடுத்த மாஸ் அப்டேட்,trisha speaks about leo movie in ponniyin selvan 2 promotion at kerala | Galatta

தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை திரிஷா தற்போது தளபதி விஜயுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கும் திரிஷா - விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மிப்பின் உச்சமாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

முதல் பாகத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்க, சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரஹ்மான், கிஷோர், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, அஸ்வின் காக்கமண்ணு, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயச்சித்ரா என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பிரம்மாண்ட படைப்பை தயாரித்துள்ளன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். 

அந்த வகையில் நேற்று ஏப்ரல் 20 ஆம் தேதி கேரளாவின் கொச்சியில் நடைபெற்ற விழாவில் பொன்னியின் செல்வன் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் அப்போது நடிகை திரிஷா மேடையில் பேசும்போது ரசிகர்கள் அனைவரும் லியோ.. லியோ.. என கூச்சலிட ஆரம்பித்தனர். இதனை அடுத்து பேசிய த்ரிஷா, "இதை நான் ஏற்கனவே சிலர் தினங்களுக்கு முன்பு இன்னொரு மேடையில் சொன்னேன். நான் இப்போதைக்கு எதுவும் பெரிதாக சொல்லி விட முடியாது. ஆனால் எனக்குத் தெரியும் நீங்கள் அனைவரும் எவ்வளவு பெரிய தளபதி விஜய், லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் என்று, லியோ திரைப்படம் நீங்கள் அனைவரும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். நாம் இதைப் பற்றி இன்னும் நிறைய பேசுவோம். அக்டோபரில் தான் ரிலீஸ் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ரொம்ப நல்லபடியாக ஷூட்டிங் நடக்கிறது. நீங்கள் அனைவரும் இப்படத்தை கொண்டாடப் போகிறீர்கள்” என நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

வண்டியின் வேகம், சாப்பாட்டின் அளவு குறைகிறது... உயிர் - உலக் வருகையால் நிகழும் மாற்றங்கள் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

வண்டியின் வேகம், சாப்பாட்டின் அளவு குறைகிறது... உயிர் - உலக் வருகையால் நிகழும் மாற்றங்கள் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடியோ

'இப்போது கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் ஒரு நாள் கிடைக்கும்.!'- AK62 பற்றி விக்னேஷ் சிவனின் மாஸ் பதில்! வீடியோ உள்ளே
சினிமா

'இப்போது கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் ஒரு நாள் கிடைக்கும்.!'- AK62 பற்றி விக்னேஷ் சிவனின் மாஸ் பதில்! வீடியோ உள்ளே

வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1 பட ஸ்பெஷல் ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த காட்டுமல்லி வீடியோ பாடல் இதோ!
சினிமா

வெற்றிமாறன் - சூரி - விஜய் சேதுபதியின் விடுதலை பாகம்1 பட ஸ்பெஷல் ட்ரீட்... சர்ப்ரைஸாக வந்த காட்டுமல்லி வீடியோ பாடல் இதோ!