இவங்க WEDDINGல நிறைய பேர் பேசாத விஷயம் என்னன்னா?- விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் செயல் குறித்து பேசிய பிரபலம்! விவரம் உள்ளே

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் செயல் குறித்து பேசிய youtuber பிரசாந்த்,youtuber prashanth opens about vignesh shivan nayanthara wedding | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தரமான FEEL GOOD திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குனர் விக்னேஷ் சிவன், போடா கூடிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இதனை அடுத்து ஒரு இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்த தனது அடுத்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை இயக்கினார். இந்த வருஷத்தில் கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிகை சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்குனர் விக்னேஷ்வர் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது.

இதனை அடுத்து தனது அடுத்த திரைப்படத்தில் அஜித் குமாரை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் பெற்றார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின்னர் சமீபத்தில் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கோமாளி மற்றும் லவ் டுடே ஆகிய படங்களின் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தெரிகிறது. இந்த புதிய திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெகு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற விக்னேஷ் சிவன் ரசிகர்கள் கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட பிரபல Youtuber பிரசாந்த், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு இவர்களது திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த கொண்டாட்டங்கள் குறித்து மட்டுமே அதிகமாக பேசப்பட்டதாகவும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் முக்கிய செயல் ஒன்று பெரிதும் பேசப்படாமல் போனதாகவும் பிரசாந்த் குறிப்பிட்டுள்ளார். அப்படி பேசுகையில், "ஒரு பெரிய திருமணம் அனைவரையும் அழைத்தார்கள், ஆனால் பலரும் பேசாத விஷயம் என்னவென்றால் அவர்கள் இரண்டு லட்சம் பேருக்கு அன்று சாப்பாடு போட்டார்கள். எங்கள் சொந்த ஊரில் அருகில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் ஒரு 200 பேர் சாப்பிட்டார்கள். மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஆட்கள், விக்னேஷ் சிவனும் சரி நயன்தாராவும் சரி மக்களுக்கு என்ன சென்று சேர்கிறது என பார்க்கிறார்கள். ஆனால் வெளியில் இவர்களது ஆடம்பரமும் கொண்டாட்டமும் தான் தெரிகிறதே தவிர நல்ல விஷயங்களை எல்லோரும் மறந்து விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே அதை ஒதுக்கி விடுகிறார்கள்" என பிரசாந்த் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியின் அந்த முழு வீடியோ இதோ…
 

சினிமா

"பேசுவதற்கு நிறைய இருக்கிறது!"- பொன்னியின் செல்வன் 2 மேடையில் த்ரிஷா கொடுத்த லியோ பட மாஸ் அப்டேட்! விவரம் இதோ

நான் நேற்று வந்த இயக்குனர்... AK62 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும்!- மகிழ் திருமேனி பற்றி மனதிலிருந்து பேசிய விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ
சினிமா

நான் நேற்று வந்த இயக்குனர்... AK62 அவருக்கு திருப்புமுனையாக இருக்கும்!- மகிழ் திருமேனி பற்றி மனதிலிருந்து பேசிய விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
சினிமா

பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!