'ரோலக்ஸ் சார் எங்கே?'- வந்தியத்தேவனில் இருந்து டில்லியாக மாறிய கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 விழாவில் சூர்யாவின் கங்குவா பட அதிரடி அப்டேட்!

பொன்னியின் செல்வன் 2 விழாவில் சூர்யாவின் கங்குவா பட அப்டேட் கொடுத்த கார்த்தி,Karthi about suriya in kanguva at ponniyin selvan 2 promotion | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராகவும் தேர்ந்த நடிகராகவும் தொடர்ச்சியாக தரமான கதாபாத்திரங்களையும் கதை களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கார்த்தி. அந்த வகையில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் சர்தார் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த கார்த்தி அடுத்ததாக இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகும் ஜப்பான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக நடித்த கார்த்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் இதயங்களிலும் இடம் பிடித்தார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் பட குழுவினர் மூம்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற்ற ப்ரமோஷன் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம் ரசிகர்கள் அனைவரும் ரோலக்ஸ்.. ரோலக்ஸ்.. என  கூச்சலிட, தொகுப்பாளர் "எங்கள் ரோலடஸ் எங்கே?" என கேட்க, வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் இருந்து வெளியில் வந்து கைதி டில்லியாக மாறிய நடிகர் கார்த்தி "ரோலக்ஸ் சார்" என்றதும் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து "அவர் இப்போது கொடைக்கானலில் இருக்கிறார்" என நடிகர் கார்த்தி தெரிவித்தார். முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக சூர்யா நடித்துவரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சூர்யா தற்போது கொடைக்கானலில் இருக்கிறார் என கார்த்தி தெரிவித்துள்ளதால் கங்குவா படத்தின் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடைபெறுவதாக ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
சினிமா

பின்னாடி இருந்து படக்குனு புடிச்சு இழுத்தா என்ன ஆவோம்?- கோபமூட்டிய விஷயங்களுக்கும் கலகலப்பாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!

வண்டியின் வேகம், சாப்பாட்டின் அளவு குறைகிறது... உயிர் - உலக் வருகையால் நிகழும் மாற்றங்கள் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

வண்டியின் வேகம், சாப்பாட்டின் அளவு குறைகிறது... உயிர் - உலக் வருகையால் நிகழும் மாற்றங்கள் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடியோ

'இப்போது கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் ஒரு நாள் கிடைக்கும்.!'- AK62 பற்றி விக்னேஷ் சிவனின் மாஸ் பதில்! வீடியோ உள்ளே
சினிமா

'இப்போது கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் ஒரு நாள் கிடைக்கும்.!'- AK62 பற்றி விக்னேஷ் சிவனின் மாஸ் பதில்! வீடியோ உள்ளே