ரிலீஸுக்கு ரெடியாகும் ராகவா லாரன்ஸின் மிரட்டலான ருத்ரன்… அதிரடி அறிவிப்புடன் வந்த புது வீடியோ இதோ!

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ஷூட்டிங் நிறைவு,raghava lawrence in rudhran movie shooting wrapped | Galatta

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த சூப்பர் ஹிட் இயக்குனராகவும் திகழ்பவர் ராகவா லாரன்ஸ். நடன கலைஞராக ஆரம்பகட்டத்தில் கூட்டத்தில் ஒருவராக தனது திரை பயணத்தை தொடங்கி, பின் தனக்கே உரித்தான ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த லாரன்ஸ், நடன இயக்குனராக வளர்ந்தார். தொடர்ந்து நடிகராக அசத்திய ராகவா லாரன்ஸ் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து அதிலும் வெற்றி கண்டார். பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தென்னிந்திய திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பக் கூடிய ஹாரர் காமெடி வகை படங்களில் ராகவா லாரன்ஸ் இயக்கிய படங்கள் வரிசையாக ஹிட்டடிதன.

அந்த வகையில் முதலாவதாக லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம் ரசிகளிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளிவந்த காஞ்சனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பாகஸ் ஆபீஸில் பெரிய வசூல் செய்தது. தொடர்ந்து பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட காஞ்சனா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்காக லக்ஷ்மி படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்க ராகவா லாரன்ஸ் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து காஞ்சனா 2 மற்றும் 3 ஆகிய பாகங்கள் வெளிவந்தன. இந்த காஞ்சனா சீரிஸ் படங்களும் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இந்த சீரிஸின் அடுத்த படைப்பாக காஞ்சனா படத்தின் நான்காவது பாகமாக துர்கா திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. துர்கா படத்தை பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அன்பறிவு சகோதரர்கள் விலகியுள்ளதால் யார் இயக்குகிறார் என்பது குறித்த இதர அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இயக்குனர் P.வாசு இயக்கத்தில் உருவாகும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் தற்போது லாரன்ஸ் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து பெரும் வெற்றி பெற்ற ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜிகர்தண்டா DOUBLE X திரைப்படத்தில் SJ.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் தயாரிப்பிலும் திரைக்கதையிலும், இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் அதிகாரம் திரைப்படத்தில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வரிசையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் படமாக தயாராகியுள்ள திரைப்படம் ருத்ரன். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக திகழும் கதிரேசன் அவர்கள் முதல் முறை இயக்குனராக தனது FIVE STAR CREATIONS சார்பில் தயாரித்து இயக்கும் ருத்ரன் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ருத்ரன் திரைப்படத்திற்கு RD.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ருத்ரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.இந்நிலையில் ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் படமாக ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசுக்கு தயார் என்றும் குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…

 

Team #Rudhran calls it a shoot wrap 🥳

The complete family entertainer is all set to release in theatres on April 14th.@offl_Lawrence @realsarathkumar @priya_Bshankar @kathiresan_offl @gvprakash @5starcreationss pic.twitter.com/bQvEOBJr7K

— Five Star Creations LLP (@5starcreationss) March 5, 2023

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!

தனி ஒருவன் 2ஐ தொடர்ந்து தயாராகிறதா கோமாளி 2..? மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன்! விவரம் உள்ளே
சினிமா

தனி ஒருவன் 2ஐ தொடர்ந்து தயாராகிறதா கோமாளி 2..? மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன்! விவரம் உள்ளே