எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னது..? தளபதிக்காக சண்டையிட்ட வரலக்ஷ்மி! வைரல் வீடியோ

தளபதி விஜய்க்காக லாஸ் வெகாஸில் சண்டையிட்ட வரலக்ஷ்மி,Varalaxmi sarathkumar fights for thalapathy vijay at sarkar shoot | Galatta

தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகைகளில் ஒருவராக, தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, எச்சரிக்கை, சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் வரலக்ஷ்மி.

மேலும் தளபதி விஜய் உடன் இணைந்து சர்க்கார், தனுஷின் மாரி 2, இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல், பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட திரைப்படங்களிலும் மிக முக்கிய வேடங்களில் நடித்து அசத்திய நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் இந்த 2023ம் ஆண்டு வெளிவந்த விந்தியா விக்டிம் வெர்டிக்ட் 3 எனும் V3 திரைப்படம் பலரது கவனத்தை பெற்றது. தொடர்ந்து பொங்கல் வெளியீடாக தெலுங்கில் நடிகர் நந்தாமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த வீரசிம்ம ரெட்டி படத்திலும் நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மைக்கேல் திரைப்படத்திலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார். இதனை அடுத்து வரிசையாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில், அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் சபரி படத்தில் கதாநாயகியாக அசத்தும் நடிகை வரலக்ஷ்மி, தொடர்ந்து பாம்பன், பிறந்தால் பராசக்தி  உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஹனுமான் எனும் தெலுங்கு படத்திலும், கலர்ஸ் என்ன மலையாள படத்திலும், லாகம் எனும் கன்னட படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் தயாராகியுள்ள கொன்றால் பாவம் திரைப்படம் நிறைய உடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் FANS MEETல் ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது சர்க்கார் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜய்க்காக லாஸ் வெகஸில் சண்டையிட்டது குறித்து பேசினார்.

இது குறித்து பேசுகையில், “என்னை வெகஸ்க்கு அழைத்துச் சென்றது என்டர்டைன்மெண்டுக்காக. எனக்கு காட்சி ஒரு நாள்தான். ஆனால் ஏழு நாள் என்னை அங்கே வைத்தார்கள். என்னை அழைத்து உட்கார வைத்து அவர் நடனம் ஆடுவார்.                                                   நான் அவரோடு சேர்ந்து ஆடுவேன். அவர் ஒத்திகை பார்க்கும்போது நானும் கூட சேர்ந்து ஆடுவேன். அந்த முதல் பாடல் அங்கு படமாக்கப்பட்டது. அப்படி அங்கு உட்கார்ந்து இருக்கும்போது அப்போது அந்த கூட்டத்தில் ஒருவர் யாரோ ஒருவர் பார்ப்பதற்கு இந்தியர் போல் தான் இருந்தார்  பார்த்தால் வெள்ளைக்காரர்கள் போல இல்லை. இந்தியர் போல் தான் இருந்தார். வந்து :யார் இந்த மனிதர் விஜய்?" என கேட்டார். பின்னர் "ஏய் யாரடா அவன் எவன்டா விஜய் சார் தெரியாதுன்னு சொன்னவன்?" என சொன்னதும், அவர் வந்து, "நீ சும்மா இரும்மா உட்காரம்மா நீ வேற எல்லாத்துக்கும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறாய்" என சொன்னார். தொடர்ந்து வரலக்ஷ்மியிடம், "அவர் பார்ப்பதற்கு தமிழர் போல தான் இருந்தாரா? இந்தியரா?" என கேட்டபோது, "பார்த்தால் அப்படி தான் தெரிந்தது. அதனால் தான் கோபம் வந்தது. யோவ் யார்யா நீ? எங்கிருந்தியா வந்து இருக்க? என கோபம் வந்தது" என பேசினார். இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் பகிர்ந்து கொண்ட நடிகை வரலக்ஷ்மியின் அந்த பேட்டி இதோ…
 

தனி ஒருவன் 2ஐ தொடர்ந்து தயாராகிறதா கோமாளி 2..? மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன்! விவரம் உள்ளே
சினிமா

தனி ஒருவன் 2ஐ தொடர்ந்து தயாராகிறதா கோமாளி 2..? மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன்! விவரம் உள்ளே

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்... வைரலாகும் புது சர்ப்ரைஸ் வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்... வைரலாகும் புது சர்ப்ரைஸ் வீடியோ இதோ!

சினிமா

"தளபதி விஜயின் லியோ படத்தில் இணைக்கிறாரா அர்ஜுன் தாஸ்..?"- ட்ரெண்டாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!