ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!

கவினின் டாடா பட தாயாக நான் வீடியோ பாடல் வெளியீடு,biggboss kavin in dada movie thayaga naan video song out now | Galatta

அரசியல் - சினிமா என இரண்டிலும் மிக நேர்த்தியாக பயணித்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது நடிப்பதில் இருந்து முற்றிலுமாக ஓய்வெடுத்துக் கொண்டு முழு நேர மக்கள் பணியில் ஈடுபட உள்ளார். அந்த வகையில் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் தான் நடிகராக தனது கடைசி திரைப்படம் என உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் & கர்ணன் என குறிப்பிடப்படும் படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகை புயல் வடிவேலு,  ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரோடு இணைந்து உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் மாமன்னன் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் கடைசியாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த கலகத் தலைவன் திரைப்படம் அதிரடி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இயக்குனர் மகிழ் திருமேனி அவர்கள் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தரமான படைப்புகளை கொடுத்து வரும் நல்ல தயாரிப்பு நிறுவனமாக மட்டுமல்லாமல் தரமான திரைப்படங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டில், FIR, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட் காத்து வாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம், ராக்கெட்ரி, குலுகுலு, திருச்சிற்றம்பலம், டைரி, கோப்ரா, கேப்டன், வெந்து தணிந்தது காடு, சர்தார், கட்டா குஸ்தி, லவ் டுடே, செம்பி ஆகிய திரைப்படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கமே பிளாக்பஸ்டர் ஹிட்டாக அஜித்குமாரின் துணிவு படத்தை வெளியிட்டுள்ளது.  இந்த வரிசையில் அடுத்ததாகரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பிக் பாஸ் போட்டியாளரும் பிரபல நடிகருமான கவின் கதாநாயகனாக நடித்த டாடா திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் கவின் உடன் இணைந்து நடிகை அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் டாடா திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவில், கதிரேஸ் அழகேசன் படத்துக்கு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான நல்ல ஃபீல் குட் திரைப்படமாக டாடா திரைப்படம் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் டாடா திரைப்படத்திலிருந்து தாயாக நான் எனும் வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. எமோஷ்னலான அந்த தாயாக நான் வீடியோ பாடல் இதோ…
 

சினிமா

"தளபதி விஜயின் லியோ படத்தில் இணைக்கிறாரா அர்ஜுன் தாஸ்..?"- ட்ரெண்டாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் - ஆதி வெற்றிக் கூட்டணியின் அடுத்த மிரட்டலான படம்... கைகோர்த்த பிரபல நகைச்சுவை நடிகர்! விவரம் உள்ளே
சினிமா

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் - ஆதி வெற்றிக் கூட்டணியின் அடுத்த மிரட்டலான படம்... கைகோர்த்த பிரபல நகைச்சுவை நடிகர்! விவரம் உள்ளே

தளபதி விஜயின் வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் மோதல் காட்சி! ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் இதோ!
சினிமா

தளபதி விஜயின் வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட மாஸ் மோதல் காட்சி! ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் இதோ!