தளபதி விஜயின் லியோ படத்திற்கு கிடைத்த கூடுதல் பலம்... ட்ரெண்டாகும் அதிரடியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தில் RED V Raptor XL கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது,red v raptor xl cam used in thalapathy vijay in leo movie | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தின் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையிலான பக்கா ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்த வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. வாரிசு திரைப்படத்தின் வெற்றி எதோ நடந்ததாக தற்போது தனது 67வது திரைப்படமாக லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார்.

முன்னதாக முதல் முறை தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரும் இணைந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காலகட்டத்தில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் உடன் மீண்டும் லோகேஷ் கனகராஜ் கைகோர்ப்பதும், உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியும், கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் இருந்து உருவான LCUம், இவற்றுக்கெல்லாம் மேல் 100% லோகேஷ் படம் என படத்தின் முதல் அறிவிப்புக்கு முன்பே எதிர்பார்ப்புகளை கிளப்பிய லியோ திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வகையில் தளபதி விஜயின் ஸ்டைலான ப்ரோமோ வீடியோ வெளியாகி வேற லெவல் ட்ரெண்ட் ஆனது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற, முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ஃபிலோமின் ராஜின் படத்தொகுப்பில் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்குனர்களாக பணியாற்றுகின்றனர். மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் லியோ திரைப்படத்திற்கும் ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். 

நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்ட லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் லியோ திரைப்படத்தில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

இந்நிலையில் லியோ படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில்  படப்பிடிப்பிற்கு பயன்படுத்தும் RED கேமரா வகைகளிலேயே உயர் ரக கேமராவான RED V RAPTOR XL ரக கேமராவை தற்போது லியோ திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்க வகையில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். வைரலாகும் லியோ பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Manoj Paramahamsa (@manojinfilm)

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்... வைரலாகும் புது சர்ப்ரைஸ் வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்... வைரலாகும் புது சர்ப்ரைஸ் வீடியோ இதோ!

சினிமா

"தளபதி விஜயின் லியோ படத்தில் இணைக்கிறாரா அர்ஜுன் தாஸ்..?"- ட்ரெண்டாகும் புகைப்படத்தால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் - ஆதி வெற்றிக் கூட்டணியின் அடுத்த மிரட்டலான படம்... கைகோர்த்த பிரபல நகைச்சுவை நடிகர்! விவரம் உள்ளே
சினிமா

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் - ஆதி வெற்றிக் கூட்டணியின் அடுத்த மிரட்டலான படம்... கைகோர்த்த பிரபல நகைச்சுவை நடிகர்! விவரம் உள்ளே