முன்னாள் காதலரால் தாக்கப்பட்ட பிரபல நடிகை... அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள்! விவரம் உள்ளே

நடிகை அனிகா விஜயி விக்ரமன் தனது முன்னாள் காதலரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்,actress anicka vijayi vikhraman attacked by her ex boyfriend | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் நடிகை அனிகா விஜயி விக்ரமன். "க்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அனிகா விக்ரமன் தொடர்ந்து விஷமக்காரன் என்னும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். அடுத்ததாக விமல் நடிப்பில் தயாராகி வரும் எங்க பாட்டன் சொத்து திரைப்படத்தில் தற்போது நடிகை அனிகா விக்ரமன் நடித்து வருகிறார். இதனிடையே தனது முன்னாள் காதலரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான நடிகை அனிகா விக்ரமன் அடிபட்ட காயங்களோடு இருக்கும் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். மிகவும் மோசமான தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை அனிகா விக்ரமனின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

இது குறித்த அந்த பதிவில், “நான் அனூப் பிள்ளை எனும் நபருடன் காதலில் இருந்தேன். அவர் என்னை கடந்த சில ஆண்டுகளாக மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் துன்புறுத்தினார். இப்படி ஒரு மனிதனை பார்த்ததில்லை. இவை அத்தனையும் செய்துவிட்டு என்னை அவர் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார். இவர் என்னை இப்படி செய்வார் என்று ஒரு மோசமான கனவு கூட நான் கண்டதில்லை. இரண்டாவது முறையாக அவர் என்னை அடித்தது பற்றி பெங்களூருவில் உள்ள போலீசாரிடம்  புகார் கொடுத்தேன். முதல் முறை சென்னையில் என்னை அவர் அடித்தபோது எனது காலில் விழுந்து அழுதார். நான் அப்போது முட்டாள் தனமாக விட்டு விட்டேன். இந்த இரண்டாவது முறை இவர் இப்படி செய்ய போது எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் அவர் போலீஸாருக்கும் பணம் கொடுத்து சமாளித்துவிட்டார். போலீசாரும் என்னை இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட சொல்லவே மிகுந்த நம்பிக்கையோடு அவர் என்னை தாக்கியுள்ளார். நான் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். எனவே அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் இந்த மனிதர் என்னை விட்டு விலக தயாராக இல்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தோம் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் எனது போனை உடைத்து விட்டார். அதனால் நான் படப்பிடிப்பிற்கு கூட செல்ல முடியவில்லை. அதற்கு முன்பும் எனக்கு வரும் அத்தனை வாட்ஸ் ஆப்  மெசேஜ்களையும், அவர் அவரது லேப்டாப்போடு இணைத்து வைத்து எனக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஹைதராபாத்துக்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் என்னுடைய போனை லாக் செய்து, என்னை குத்தியது என்னை திணறடித்தது. பின்னர் அவரிடம் நான் கெஞ்சினேன் எனது போனை கொடுக்க சொல்லி அவர் என் மீது ஏறி அமர்ந்து கொண்டார். அவர் என்னைவிட நான்கு மடங்கு இருப்பார். மேலும் எனது வாயையும் பொத்திவிட்டார். என்னுடைய குரலும் வெளிவராமல் நான் தவித்த போது எனது சுயநினைவை இழந்தேன். அதுதான் என்னுடைய கடைசி இரவு என நினைத்தேன். பின்னர் எழுந்து நான் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தேன். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை. எனவே அவரிடம் இருந்து தப்பித்து அடுத்த நாள் காலை வரை குளியலறைக்குள் இருந்தேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அப்போது அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும், "இந்த முகத்தோடு நீ எப்படி நடிக்கிறாய் என பார்க்கிறேன்" என சொன்னார். எனது முகத்தை நான் கண்ணாடியில் பார்த்து அழுத போது அவர் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தார். என்னை தாக்கிய பிறகு அவர் நண்பர்களோடு சேர்ந்து பார்ட்டி செய்தார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனைக்கும் பிறகு இதனை எனது குடும்பத்திற்கோ போலீசாருக்கோ தெரிவிக்கவே எனக்கு கொஞ்சம் நேரம் ஆனது. சரியாகும் உடல் ரீதியாகவும் மீண்டு வருவதற்கு நேரம் பிடித்தது. ஆனால் என்னால் சாதாரணமாக இதை விட்டு விட முடியாது. இதை என்ன செய்வது என்று என் குடும்பத்திற்கு எந்த ஐடியாவும் இல்லை. கனத்த இதயத்தோடு புரிந்து கொண்டேன் இந்த உலகம் மிகவும் இருள் நிறைந்தது. மனிதாபிமானத்தை விட பணம்தான் பெரியது என்பதை நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் சில நபர்கள் எனக்கு உணர்த்தினார்கள். என தனது வேதனை குறித்து மிகுந்த உருக்கத்தோடு நடிகை அனிகா விக்ரமன் பதிவிட்டுள்ளார். 

மேலும், "இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். அவர் இப்போது தலைமறைவாக இருக்கிறார். அவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். என்னை தொடர்ந்து மிரட்டி வருவதன் காரணமாகவே இதனை நான் இப்போது பதிவு செய்து இருக்கிறேன். நான் முற்றிலும் தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு திரும்பி விட்டேன்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நடிகை அனிகா விக்ரமனின் அந்த பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Anicka Vijayi Vikramman (@anickavikramman)

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக்பாஸ் கவினின் டாடா... எமோஷ்னலான தாயாக நான் வீடியோ பாடல் இதோ!

தனி ஒருவன் 2ஐ தொடர்ந்து தயாராகிறதா கோமாளி 2..? மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன்! விவரம் உள்ளே
சினிமா

தனி ஒருவன் 2ஐ தொடர்ந்து தயாராகிறதா கோமாளி 2..? மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதை உறுதி செய்த பிரதீப் ரங்கநாதன்! விவரம் உள்ளே

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்... வைரலாகும் புது சர்ப்ரைஸ் வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன் பட ஷூட்டிங்... வைரலாகும் புது சர்ப்ரைஸ் வீடியோ இதோ!