தளபதி விஜய் உடன் லியோ படத்தில் நடித்த பிக்பாஸ் ஜனனி... மிஷ்கின், சாண்டி மாஸ்டருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி பேசிய ஸ்பெஷல் வீடியோ!

விஜயுடன் லியோ படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்த பிக் பாஸ் ஜனனி,biggboss janani shared working experience with thalapathy vijay in leo | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்திருக்கும் லியோ திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய ஜனனி நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

“முதலில் சென்னையில் அந்த காபி ஷாப் காட்சி தான் எடுத்தார்கள் இல்லையா? எடுத்த உடனே ஒரு டயலாக்கை சொல்லுவது சரி ஆனால் ஒரு சண்டைக் காட்சியை பார்த்தது எப்படி இருந்தது?” எனக் கேட்டபோது, “அந்த காட்சியில் சாண்டி மாஸ்டர் என் கையைப் பிடித்து இழுத்தார் என் கை மிகவும் சென்சிடிவ் ஆனது. அதில் எனக்கு காயம் எல்லாம் ஏற்பட்டது. அதன் பிறகு கொஞ்ச நேரம் கழித்து சாண்டி மாஸ்டர் “அதை சொல்லு” என்று சொன்னார். நான் “இல்லை சார் பரவாயில்லை” என்று சொல்லிவிட்டேன். எனக்கென்ன தோன்றியது என்றால் நம்மளால் யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது. அதன்பிறகு லோகேஷ் அண்ணா, “ஸ்கிரிப்ட் படி  இதுதான் சீன் ஓகேவா” என்று தனியாக கூப்பிட்டு கேட்பார். நானும் “ஓகே சார் நான் செய்வது ஓகேவா?” என கேட்பேன். அதற்கு “ஓகே தாம்மா ஒன்னும் பிரச்சனை இல்லை” என சொல்லுவார். அந்த துப்பாக்கி முனை காட்சி. இதுதான் காட்சி இப்படித்தான் இருக்கும் என்று சொல்லிவிட்டார். அது நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும், காலையில் எனக்கு கல்யாணம் நடக்கிறது நான் இரவு வேலையை முடித்துவிட்டு கிளம்புகிறேன் அப்படி தான் இருக்கும் அந்த காட்சி. அது உண்மையாக நடக்கும் பொழுது எப்படி இருக்கும் என்று மட்டும் தான் சொல்லியிருந்தார். “இதை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள் இப்படி இருக்கும் போது இது நடந்தால் எப்படி இருக்கும்” என்று சொல்லி இருந்தார். அதனால் நானும் இது நிஜமாகவே நமக்கு நடந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து தான் நடித்திருந்தேன். ஓரளவுக்கு நன்றாக வந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.” என்றார். தொடர்ந்து அவரிடம், “அங்கிருக்கும் இயக்குனர்களும் சக நடிகர்களும் தான் உங்களுக்கு பெரிய பலமாக இருந்திருப்பார்கள். நீங்கள் ஒரு சீனை நடித்த பிறகு விஜய் சார் சாண்டி மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் இயக்குனர் மிஷ்கின் இவர்கள் எல்லோரும் என்ன கூறினார்கள்?” எனக் கேட்டபோது, “அனைவரும் கைத்தட்டினார்கள் அதுவும் ஒரு ஷாட் இருந்தது அங்கு மிஷ்கின் சார் கையைப் பிடித்து இழுப்பார் ஒரு டேக்கில் செய்து முடித்து விட்டேன் என் மனதில் ஒன்றே ஒன்றுதான் ஓடிக்கொண்டிருந்தது என்னால் மற்ற எந்த ஆர்டிஸ்ட்களுக்கும் அதிக டேக்குகள் வரவே கூடாது என்று, அப்பொழுது நான் ஒரே டேக்கில் தான் அதை செய்து முடித்தேன். அப்பொழுது மிஷ்கின் சார் கைதட்டி விட்டு மற்றவர்களையும் கைதட்ட சொல்லிவிட்டு, “என் அடுத்த படத்தில் நீ நடித்துக் கொடுக்க வேண்டும்” என்றார். “கண்டிப்பாக சார்” என்று கூறினேன். நான் லோகி அண்ணாவிடம் சென்று கேட்டேன் அவர் எதுவுமே கூற மாட்டார் நன்றாக இருந்தது என்றால் சொல்லிவிடுவார் .ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை கேட்ட பொழுது ஓகே என்று கூறினார். டேக்கில் நான் நடித்து விடுவேன் அவர் ஓகே ஓகே என்று சென்றுவிடுவார். அப்பொழுது இவரு எதுவுமே சொல்லாமல் செல்கிறார் என்று நான் போய் கேட்டேன், “சார் சரியாகத்தான் செய்கிறேனா?” என்று அப்பொழுது அவர், “சரி இல்லை என்றால் நான் எடுக்கவே மாட்டேன்” என்றார். அப்பொழுது தான் எனக்கு தோன்றியது ஓகே நாம் ஏதோ நன்றாக செய்திருக்கிறோம் என்று…”

என தெரிவித்துள்ளார். அந்த முழு பேட்டி இதோ…