80's பில்டப் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரெட்ரோ காமெடி விருந்தாக இந்த நவம்பரில் வெளிவரும் சந்தானத்தின் புதிய படம்!

சந்தானத்தின் 80s பில்டப் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,santhanam in 80s buildup movie release date announcement | Galatta

அடுத்தடுத்து சூப்பர் ஹிட் காமெடி படங்களை கொடுத்து வரும் நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்த சூப்பர் ஹிட் படமாக வெளிவர இருக்கும் 80’S பில்டப் திரைப்படம் வருகிற நவம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக பட குழுவினர் அறிவித்துள்ளனர். பிரபுதேவாவின் குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் மற்றும் காஜல் அகர்வாலின் கோஸ்டி உள்ளிட்ட என்டர்டெய்னிங் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் S.கல்யாண் இயக்கத்தில் முதல்முறையாக நடிகர் சந்தானம் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் 80’S பில்டப். சந்தானம் உடன் இணைந்து ராதிகா ப்ரீத்தி கதாநாயகியாக நடித்திருக்கும் இந்த 80’S பில்டப் திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ் காந்த், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், டைகர் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவில் MS.பாரதி படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த பில்டப் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் சந்தானத்தின் 80's பில்டப் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் கலாய் என்ற பெயரில் வந்த ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ரசிகர்கள் இடையே பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. வித்தியாசமான ரெட்ரோ காமெடி படமாக தயாராகி இருக்கும் இந்த 80's பில்டப் படமும் சந்தானத்திற்கு மற்றொரு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து காமெடியனாக கலக்கி முன்னணி நட்சத்திர நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து கதாநாயகனாக தனது புதிய பாதையை தொடங்கிய நடிகர் சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குளுகுளு மற்றும் ஏஜென்ட் கண்ணாயிரம் என வரிசையாக கலக்கலான படங்களை கொடுத்து வருகிறார். 

இந்த வரிசையில் இந்த 2023 ஆண்டில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் பக்கா ஹாரர் காமெடி ட்ரீட்டாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிவந்த கிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகி வரும் மற்றொரு நகைச்சுவை படமான இந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் N.ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்திலும் சந்தானம் நடிக்க இருப்பதாக தெரிகிறது இதுவரை அது குறித்த எந்த அறிவிப்புகளும் வராத நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 
 

Get ready for the RETROspective comedy feast 💥🎸

LOL😄 at #80sBuildup from 24th November In Cinemas

A #StudioGreen Release through @SakthiFilmFctry@GnanavelrajaKe @NehaGnanavel @iamsanthanam @DirKalyan @preethi_radhika @ksravikumardir @MunishkanthR @KingsleyReddinpic.twitter.com/3Sh1gUVERO

— Studio Green (@StudioGreen2) November 3, 2023