தமிழ் திரையில் தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தை ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ளார். பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ராக் ஃபோர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

Radikaa Completes Dubbing Work For KuruthiAattam

கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்தார். 

Radikaa Completes Dubbing Work For KuruthiAattam

இதனைத்தொடர்ந்து படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா தனது டப்பிங் பணிகளை முடித்துள்ளார். தற்போது வரும் தமிழ் சினிமாவில் ராதிகா அம்மாவாக நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கிறது. கடைசியாக வானம் கொட்டட்டும் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ராதிகா.