2009-ம் ஆண்டு வாண்டட் படத்தின் மூலம் சல்மான் கான் மற்றும் பிரபுதேவா கூட்டணி முதல்முறையாக இணைந்தது. அந்தப் படத்தைத் தொடர்ந்து சல்மான் கான் பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 வெளியானது. இந்தப் படம் வெற்றி பெறவே மீண்டும் மூன்றாவது முறையாக இருவரும் ராதே படத்தில் இணைந்தார்கள். 

இந்தப் படத்தில் சல்மான் கான் உடன் திஷா பதானி, ஜாக்கி ஷெராப், பரத், ரன்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். கடந்த ஆண்டு மே மாதமே திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. 

மே 13-ம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகும் அதேநாளில் ஜீ ப்ளெக்ஸ் ஓடிடி தளத்திலும் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஓடிடியில் பார்க்க விரும்புவோர் அதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.

இந்நிலையில் இன்று இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிரடியாக ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பியுள்ளன. இந்தியாவில் அதிகம் வசூல் செய்யும் சல்மான் கானின் படமே, ஓடிடி-யில் வெளியாவதால் மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

பிரபு தேவா நடிகராக பஹீரா படத்தில் நடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதன் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.