“என் Decision - னால அப்பாவ இறக்கி விட்டுட்டேன்..” பாக்யராஜ் குறித்து கலங்கிய சாந்தனு.. – Exclusive interview இதோ..

சாந்தனு திரைப்பயணம் குறித்து இயக்குனர் பாக்யராஜ் பகிர்ந்த தகவல் முழு வீடியோ இதோ - Shanthnu Bhagyaraj about his career failures | Galatta

தமிழ் சினிமாவில் தலை சிறந்த திரைக்கதை ஆசிரியராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் இயக்குனர் பாக்யராஜ். வெற்றிக்கொடி கட்டி பறந்த பாக்யராஜ் தன் மகனும் நடிகருமான சாந்தனு அவரின் திரைப்பயணத்திற்கு மிகப்பெரிய ஊக்கமாகவும் உந்துதலாகவும் இருந்து வருகிறார். அதன்படி திரைத்துறையில் விடாமுயற்சியுடன் பயணித்து வரும் சாந்தனு அவர்களின் முயற்சிக்கு பரிசாக இன்று வெளியாகியுள்ள இராவண கோட்டம் திரைப்படம் அமைந்துள்ளது. கிராம பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தித்த சிக்கல்களையும் இப்படத்திற்கு கொடுத்திருக்கும் முயற்சிகளை பற்றி நடிகர் சாந்தனு அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்ட பகிர்ந்து கொண்டார். அதில் தன் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தேறியது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனரும் சாந்தனு அவர்களின் தந்தையுமான பாக்யராஜ் அவர்கள் சாந்தனு அவர்களை பற்றியும் இராவண கோட்டம் திரைப்படம் குறித்தும் பேசுகையில்,  

“சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் போது நிறைய கஷ்டங்கள் சந்திக்க வேண்டிவரும். சாந்தனு அதெல்லாம் தாண்டி வந்துட்டாரு..  ஆனா இந்த படத்துல வட்டி முதலுமாய் சேர்ந்து கஷ்டபட்டுட்டார்.. நேரம் கை கொடுக்க வேண்டும்.  எல்லா இடஞ்சலும் இராவண கோட்டம் படத்திற்கு வந்தது. படக்குழுவே வேற.. அதனால் இந்த படத்தில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை.. படத்திற்கு வந்த சிக்கல்களை அவன் அவங்க அம்மா கிட்ட தான் பகிர்ந்து கொண்டான்.  படத்தில் பெரிய ஹீரோவா சாந்தனு வந்துட்டாருனு எல்லோரும் நினைப்பாங்க.. என்ன பொறுத்தவரை அவர் ரியல் ஹீரோவா இந்த படத்தில் வந்திருக்காரு.. ஏனென்றால் கொஞ்சம் கூட தயங்காமல் வந்த சிக்கல்களை எதிர்கொண்டு போயிருந்தார்.. இந்த படம் அவர் வாழ்க்கைக்கு மிகப் பெரிய அஸ்திவாரமாக இருக்கும் னு எனக்கு தோனுது.. என்றார் இயக்குனர் பாக்யாராஜ்.

பின் தொடர்ந்து இது குறித்து பேசிய நடிகர் சாந்தனு அவர்கள், “அப்பா என்ன பத்தி நினைச்ச விஷயத்தை இப்போதான் சொல்றாரு..இத்தனை நாளுக்கு எனக்கு தெரியல அது பற்றி..அவர் எந்த சூழல் வந்தாலும் என்ன பண்ண முடியுமோ அவரால அந்தளவு இறங்கி எனக்கு உதவி பண்ணிட்டு இருக்காரு.. என்னோட முடிவுகளினால் ஏற்படும் பிரச்சனைகளால் அப்பாவ நான் இறக்கி விட்டுட்டு இருக்கேன்..இதுபற்றி நிறைய பேரிடம் நான் பேசியிருக்கேன்.. நிறைய பேர் என்னிடம் சொல்வது உங்கப்பாவுக்கு கடமை பட்டிருக்கோம்னு.. அது எந்த வகையில் னு தெரியாது.‌ அப்பாக்காக நீங்க ஜெயிச்சு வரணும் னு சொல்லி எனக்கு நிறைய பேர் உதவுனாங்க.. நான் அந்த வகையில் ஆசிர்வதிக்கப்பட்டவன்." என்றார் நடிகர் சாந்தனு..

மேலும் நடிகர் சாந்தனு அவர்கள் இராவண கூட்டம் திரைப்படம் குறித்தும் சாந்தனு அவர்களின் திரைப்பயணம் குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

 “8 வருஷம் சண்டை.. இதனால தான் breakup ஆச்சு..” நடிகர் சாந்தனு பகிர்ந்து கொண்ட  கலகலப்பான தகவல் – Exclusive interview இதோ..
சினிமா

“8 வருஷம் சண்டை.. இதனால தான் breakup ஆச்சு..” நடிகர் சாந்தனு பகிர்ந்து கொண்ட கலகலப்பான தகவல் – Exclusive interview இதோ..

நீ ஏறி ஆடு கபிலா.. சார்பட்டா 2 படத்திற்காக வெறித்தனமான Workout ல் நடிகர் ஆர்யா.. – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

நீ ஏறி ஆடு கபிலா.. சார்பட்டா 2 படத்திற்காக வெறித்தனமான Workout ல் நடிகர் ஆர்யா.. – வைரலாகும் Glimpse இதோ..

அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..
சினிமா

அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..