தியேட்டர் மற்றும் ஒடிடி தளங்களில் வார இறுதியில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்.. - அட்டகாசமான பட்டியல் இதோ..

இந்த வாரம் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் பட்டியல் விவரம் இதோ - Weekend releases in ott platforms and theatre | Galatta

வார இறுதி என்றாலே ரசிகர்கள் பெரிதும் பொழுதுபோக்க நாடும் இடமாக திரையரங்கம் இருந்து வருகிறது. சமீப காலமாக வீட்டிலிருந்த படியே ஒடிடியில் பார்க்கும் வசதியும் அமைந்துள்ளதால் ரசிகர்களுக்கு வார இறுதி திருப்திகரமாக அமைய நிறைய வழி தற்போது அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28 ம் தேதி இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தமிழ் திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகள் ஆக்கிரமித்து இருந்தன. மக்களும் பெருவாரியான ஆதரவினை இப்படத்திற்கு கொடுத்து தற்போது இப்படம் உலகளவில் 300கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது புது வரவாக வெளியாகியுள்ள திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் வேகம் குறைந்துள்ளது. அதன்படி இந்த வாரம் ரசிகர்களின் வார இறுதியை திருப்திகரமாக மாற்ற திரையரங்குகள் மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாகியுள்ள முக்கிய திரைப்படங்கள் பற்றியான தொகுப்பே இந்த சிறப்பு கட்டுரை..

கஸ்டடி

மாநாடு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவான திரைப்படம் ‘கஸ்டடி’. ரசிகர்களின் எதிர்பார்பில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு தற்போது ரசிகர்கள் முன்னுரிமை வழங்கி வருகின்றனர்.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

ஃபர்ஹானா

பல சர்ச்சைகளை தாண்டி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம்  ‘ஃபர்ஹானா’. மான்ஸ்டர் திரைப்பட இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அடுத்த படமாக உருவாகியுள்ள இப்படத்தின் முன்னோட்டம் வெளியான தருணத்திலிருந்தே இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த எதிர்பார்ப்பின் படியே ரசிகர்கள் இப்படத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

குட் நைட்

ஆரவாரமின்றி வெளியாகியுள்ள குட் நைட் திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. அதன்படி ஜெய் பீம் நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ககுட் நைட்’ படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

இராவண கோட்டம்

மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி உள்ள இராவண கோட்டம் திரைப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதன்படி சாந்தனு நாயகனாக நடித்து இன்று வெளியாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவின் வழங்கி வருகின்றனர்

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

ஒடிடி- ல் வெளியான தமிழ் படங்கள் :

சொப்பன சுந்தரி

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கலகலப்பான காமெடி திரைப்படமாக கடந்த மாதம் வெளியான ‘சொப்பன சுந்தரி’ திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் வெளியாகி இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

ருத்ரன்

கடந்த மாதம் வெளியாகி கமர்ஷியல் ஹிட் அடித்த ராகவா லாரன்ஸ் அவர்களின் ‘ருத்ரன்’ திரைப்படம் வரும் மே 14 அன்று சன் நெக்ஸ்ட் ஒடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

சாகுந்தலம்

சமந்தா நடிப்பில் சரித்திர திரைப்படமாக உருவான ‘சாகுந்தலம்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இப்படம் தற்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

யாத்திசை

குறைந்த பொருட்செலவில் உருவாகி பிரம்மாண்ட படைப்பாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட யாத்திசை திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

திருவின் குரல்

அருள்நிதியின் வித்யாசமான நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘திருவின் குரல்’ திரைப்படம் நெட்பிலிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

தெய்வ மச்சான்

நடிகர் விமல் நடிப்பில் சில தினங்களுக்கு முன்னதாக வெளியான தெய்வ மச்சான் திரைப்படம் டெண்ட் கோட்டா தளத்தில் வெளியாகியுள்ளது.

bigg boss fame julie marriage photo goes viral on internet here is the details

நீ ஏறி ஆடு கபிலா.. சார்பட்டா 2 படத்திற்காக வெறித்தனமான Workout ல் நடிகர் ஆர்யா.. – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

நீ ஏறி ஆடு கபிலா.. சார்பட்டா 2 படத்திற்காக வெறித்தனமான Workout ல் நடிகர் ஆர்யா.. – வைரலாகும் Glimpse இதோ..

அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..
சினிமா

அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..

தென்னிந்தியாவில் சர்ச்சை.. வட இந்தியாவில் ஆதரவு.. -  37 நாடுகளில் நாளை வெளியாகும் ‘கேரளா ஸ்டோரி’.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

தென்னிந்தியாவில் சர்ச்சை.. வட இந்தியாவில் ஆதரவு.. - 37 நாடுகளில் நாளை வெளியாகும் ‘கேரளா ஸ்டோரி’.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..