திருமண கோலத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் ஜூலி.. - வைரலாகும் புகைப்படம்.. விவரம் இதோ..

வைரலாகும் பிக்பாஸ் ஜூலியின் திருமண புகைப்படம் விவரம் இதோ -  Bigg boss juile marriage viral  photo | Galatta

தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்படும் நிகழ்சிகளில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வருவது பிக் பாஸ் நிகழ்ச்சி.. இந்தியா முழுவதும் பிரபலமான இந்த நிகழ்ச்சியின் தமிழ் சீசனை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் ஏழாவது சீசனுக்கான வேலைகளும் தொடங்கப்படவுள்ளது. ஆறு சீசன்களை கடந்தாலும் மக்களுக்கு இதுவரை பிடித்த சீசனாக இருப்பது முதல் சீசன் தான்.

எந்தவொரு முன் திட்டமும் இல்லாமல் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக மாறிய பிக் பாஸ் சீசன் 1 ல் கவிஞர் சினேகன், நடிகை ஓவியா, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் மற்றும் மாடலிங்க் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அட்டகாசமான போட்டியில் வெற்றியாளராக மாடல் ஆரவ் வெற்றிபெற்றார். இந்த சீசனில் பலர் பிரபலமானார். அதில் மக்கள் மத்தியில் விரைவாக பிரபலமானவர் ஜூலி.

சென்னை ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுப்பட்டு வைரலான ஜூலி, பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பாதியிலே வெளியேற்றபட்ட ஜூலியை பிக்பாஸ் ரசிகர்கள் ட்ரோல்களும் விமர்சனங்களும் செய்து வறுத்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்றார் ஜூலி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ட்ரோல்கள் பல ஜூலிக்கு ஆதரவாக மாறியது. நல்ல பெயரை தன் விளையாட்டின் மூலம் ஜூலி இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றார். அவருக்கென தனி ரசிகர் கூட்டமே இணையத்தில் உருவானது. பின் சில தொலைக்காட்சி நிகழ்சிகளில் தொகுப்பாளினியாகவும் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களிலும் ஜூலி பங்கு பெற்று வந்தார். இவர் கதாநாயகியாக சில படங்களிலும் நடித்து வந்தார்.

இடையே எந்தவொரு நிகழ்ச்சியிலும் படங்களிலும் பங்குபெறாத ஜூலி திடீரென சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அதன்படி சில சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் ஜூலி திடீரென மணப்பெண் கோலத்தில் மாலையும் கழுத்துமாய் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதையடுத்து அதிர்ச்சியில் ரசிகர்கள் ஜூலிக்கு திருமணம் முடிந்ததா என்ற கேள்வியை எழுப்பி வந்தனர்.

shanthnu bhagyaraj and his wife shares their breakup stories watch exclusive here

அதன்பின் ஜூலி விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் ஜூலி நடித்து வரும் கதாபாத்திரத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கெட்டப் என்று தெரியவந்து ரசிகர்கள் ஆஸ்வாசபடுத்தி கொண்டனர். இதையடுத்து அந்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது..

அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..
சினிமா

அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..

தென்னிந்தியாவில் சர்ச்சை.. வட இந்தியாவில் ஆதரவு.. -  37 நாடுகளில் நாளை வெளியாகும் ‘கேரளா ஸ்டோரி’.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

தென்னிந்தியாவில் சர்ச்சை.. வட இந்தியாவில் ஆதரவு.. - 37 நாடுகளில் நாளை வெளியாகும் ‘கேரளா ஸ்டோரி’.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..
சினிமா

வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..