நீ ஏறி ஆடு கபிலா.. சார்பட்டா 2 படத்திற்காக வெறித்தனமான Workout ல் நடிகர் ஆர்யா.. – வைரலாகும் Glimpse இதோ..

சார்பட்டா படத்திற்கு வெறித்தனமான உடற்பயிற்சியில் நடிகர் ஆர்யா - Arya Work out for Pa ranjith Sarpatta 2 | Galatta

சமகால தமிழ் சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் குத்துச்சண்டை போட்டியை மையப்படுத்தி உருவான இப்படத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் கோக்கன், சந்தோஷ் பிரதாப், முத்துகுமார் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருப்பார். அட்டகாசமான கதைகளத்தில் உருவான இப்படம் கடந்த 2021 அமேசான் பிரைமில் வெளியானது. ஒடிடியில் வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தியது.

ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வரும் சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் ‘Round 2’ என்ற பெயரில் இயக்கவுள்ளதாக பா ரஞ்சித் முன்னதாக அட்டகாசமான முதல் பார்வையுடன் அறிவித்தார். இதையடுத்து ரசிகர்கள் இந்த அறிவிப்பினை கொண்டாடி வருகின்றனர். தற்போது இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரம் கூட்டணியில் ‘தங்கலான்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்து அடுத்த ஆண்டு மிகப்பெரிய அளவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின்பே சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் திரையில் மீண்டும் ஜொலித்த நாயகன் ஆர்யா சார்பாட்டா படத்திற்காக தன் உடலை மெருகேற்றும் வீடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில்

“அடுத்த 2 ஆண்டு களில் நடிக்கவிருக்கும் படத்திற்காக  உடற்பயிற்சி செய்து வருகிறேன்... #Mr.X #Sangamithra #Sarpatta2” என்று பதிவிட்டுள்ளார்.

actor prasanna emotional post for sneha on their 11th anniversary

 அவரது பதிவையடுத்து ரசிகர்கள் அப்பதிவினை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். பல அட்டாகாசமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்த ஆர்யாவின் முந்தைய படங்களாக கேப்டன், எனிமி, அரண்மனை 3 திரைப்படங்கள் மக்களிடம் பெருமளவு வரவேற்பை பெறாத நிலையில் ஆர்யா தற்போது தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி தற்போது ஆர்யா FIR பட இயக்குனர் மனு அரவிந்த் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து Mr.X என்ற படத்திலும் சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சங்கமித்ரா’ படத்திலும் தற்போது நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும்  ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..
சினிமா

வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

“இதுக்கு இயக்குனரை பழி சொல்ல முடியாது..“ தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் சாந்தனு பகிர்ந்த தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“இதுக்கு இயக்குனரை பழி சொல்ல முடியாது..“ தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் சாந்தனு பகிர்ந்த தகவல் – முழு வீடியோ இதோ..