அழகான வரிகளுடன் மனைவி சினேகாவை புகழ்ந்து தள்ளிய பிரசன்னா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. - இணையத்தில் வைரலாகும் பதிவு..

மனைவி சினேகாவை புகழ்ந்த பிரசன்னா இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ - Actor Prasanna romantic note to sneha viral post | Galatta

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதை கவர்ந்த காதல் ஜோடிகளாக பல காலமாக இருந்து வருபவர் நடிகர்கள் சினேகா – பிரசன்னா தம்பதியினர். இருவரும் 90 பிற்பகுதியில் அறிமுகமாகி பல ஹிட் படங்களில் நடித்து இருவருக்குமான தனி தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர். தமிழ் தமிழ் மட்டுமல்லாமல் இருவரும் மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்து தனி இடம் வகித்து வந்தனர் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் சினேகா, பிரசன்னா இருவரும் இணைந்து முதல் முறையாக ஒன்றாக நடித்தனர், அன்றிலிருந்து இருவருக்கும் மலர்ந்த காதல் கடந்த 2012 ல் திருமணமாக முடிந்தது. இருவரது திருமணமும் ரசிகர்கள் உற்சாகத்துடன் வாழ்த்தி கொண்டாடிய தருணமும் உண்டு.

அதையடுத்து சினேகா பெரிதளவு படங்களில் நடிப்பது இல்லை. பிரசன்னா தொடர்ந்து திரைத்துறையில் ஹீரோவாகவும் குணசித்திர நடிகராகவும் வில்லனாகவும் அசத்தி வந்தார். அதன்படி கிங் ஆப் கோத்தா, துப்பறிவாளன் 2 படத்தில் நடித்துவருகிறார். இடையே சினேகா தனுஷ் உடன் இணைந்து பட்டாஸ் படத்தில் நடித்து கவனம் பெற்றார். மேலும் மலையாளத்தில் கிறிஸ்டோபர் என்ற படத்திலும்  நடித்துள்ளார். திரைத்துறையில் மட்டுமல்லாமல் இருவரும் தற்போது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது இருவரது புகைப்படங்கள் அல்லது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் நடிகர்கள் பிரசன்னா – சினேகா தங்களது 11 வது ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில அழகிய தருணங்களில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து அதனுடன்..

“ஹே.. பொண்டாட்டி இந்த சிறப்பு நாளில் நான் உன்னிடம் சொல்ல விரும்புவது என்னுடைய வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டு இருந்தாலும், உன் கையை பிடித்துக் கொண்டு சென்ற நான் நிறைய கற்றுக் கொண்டேன். உன்னுடைய அன்பு என்னை வழி நடத்தியது, எனக்கு ஏற்பட்ட இருள் அனைத்தையும் விரட்டும் ஒளி நீயாகும்.

உன்னை என் துணையாக பெற்றதற்கு நான் மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன், நம் குழந்தைகள் விலை மதிப்புள்ள பரிசுகள், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன்னுடைய அன்பால் உன்னுடைய புன்னகையால் என் உலகத்தை நீ அற்புதமாக வைத்திருக்கிறாய்” என்று அன்பு நிறைந்த வார்த்தைகளை பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

மேலும் சமீபத்தில் இணையத்தில் சினேகா பிரசன்னா தம்பதியனர் விவகாரத்து பெறுவதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் பிரசன்னா அவரது பதிவு தற்போது வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளது. இதையடுத்து பிரசன்னா அவர்களின் பதிவு மிகப்பெரிய அளவு இணையத்தில் வைரலாவது மட்டுமல்லாமல் ரசிகர்களின் வாழ்த்துகளை பெற்று வருகிறது.  

 

 

View this post on Instagram

A post shared by Prasanna_actor (@prasanna_actor)

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

“இதுக்கு இயக்குனரை பழி சொல்ல முடியாது..“ தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் சாந்தனு பகிர்ந்த தகவல் – முழு வீடியோ இதோ..
சினிமா

“இதுக்கு இயக்குனரை பழி சொல்ல முடியாது..“ தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் சாந்தனு பகிர்ந்த தகவல் – முழு வீடியோ இதோ..

உதவி இயக்குனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. கண்டனம் தெரிவித்த பா ரஞ்சித்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..
சினிமா

உதவி இயக்குனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. கண்டனம் தெரிவித்த பா ரஞ்சித்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..