“8 வருஷம் சண்டை.. இதனால தான் breakup ஆச்சு..” நடிகர் சாந்தனு பகிர்ந்து கொண்ட கலகலப்பான தகவல் – Exclusive interview இதோ..

Breakup குறித்து மனம் திறந்த சாந்தனு பாக்யராஜ் வீடியோ இதோ - Actor Shanthnu Bhagyaraj about his breakup stories | Galatta

தமிழ் சினிமாவில் முதல் படத்திலே கவனம் பெற்று தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவராய் இருக்கும் நடிகர் சாந்தனு பாக்யராஜ். விடாமுயற்சியுடன் திரைத்துறையில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து வரும் அவர் சாந்தனு நடிப்பில் இயக்குனர்  விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ‘இராவண கோட்டம்’ திரைப்படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இராவண கோட்டம் திரைப்படம் குறித்தும் தனது திரை வாழ்கை குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் நடிகர் சாந்தனு அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இதில் ஒரு பகுதியாக தனது குடும்பாத்தாருடன் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவருடைய மனைவியும் பிரபல தொகுப்பாளருமான கீர்த்தி கலந்து கொண்டு தங்கள் காதல் நாட்களில் நடந்த சுவாரஸ்யமான தருணங்களை பகிர்ந்து கொண்டனர். அதில் இருவருக்கும் இடையே நடந்த காதல் முறிவு குறித்து நடிகர் சாந்தனு பேசியது,  

“ரெண்டுதடவ லவ் பண்ணி, டேட்டிங்க் அப்பறம் பிரேக் ஆப் பண்ணி.. அப்பறம் 8 வருஷம் கழிச்சு தான் திருப்பவும் சேர்ந்தோம்..  அப்போ லவ் பண்ணும்போது சின்ன சின்ன விஷயத்துக்கு சண்டை போட்டுட்டு இருப்போம். அது போல ஒரு சண்டையில 2 நாள் பேசாம இருந்தோம். அந்த நேரம் வேற ஒரு தோழி ஒருத்தவங்களை எதேச்சையா சந்திச்சு பேசிட்டு இருந்தேன். அப்பறம் அவங்க காபி குடிக்க கூப்டாங்க.. நானும் சரி னு சொல்லிட்டேன். அப்பறம் கிகி பத்தி யோசிச்சுட்டு இருந்தேன்.. ஏன் சரி‌னு சொன்னோம்.. ஆனா இது தெரிஞ்சா கஷ்டபடுவான்னு.. நான் கிகி கிட்ட சொல்லாம காபி குடிக்க போயிட்டேன்.. திடீருனு கிகி போன் பண்ணாங்க.. நான் டேபிள் க்கு அடியில போய் சொல்லுமா, அப்பவோட கதை கேட்டுட்டு இருக்கேன்னு சொன்னேன்.. அவங்க எங்க காபி ஷாப்லயானு கேட்டாங்க.. நான் சுத்தி சுத்தி பார்த்தேன்.. அப்றம் தான் தெரிஞ்சது இவங்க பிரண்ட் யாரோ போட்டு கொடுத்துருக்காங்க..

அதுக்கப்புறம் வந்தது தான் இந்த பிரேக் ஆப். அதுக்கப்புறம் 8 வருஷம் ஆயிடுச்சு.. நேர்மையா சொல்றேன் அது எந்தவொரு உள்ளர்த்தமும் இல்லாம சாதாரணமா ஒரு காபி சந்திப்பு தான்.. 8 வருஷம் கழிச்சு நாங்க ஒரு மேடையில ஒண்ணா ஆடுனோம்.. அப்போ இவங்க நண்பர்களாம் கமல் சார் பாட்டு லாம் போட்டு அந்த காதலை வரவெச்சிட்டாங்க.." என்றார் சாந்தனு..

மேலும் நடிகர் சாந்தனு தன் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு கலகலப்பான தருணங்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

தென்னிந்தியாவில் சர்ச்சை.. வட இந்தியாவில் ஆதரவு.. -  37 நாடுகளில் நாளை வெளியாகும் ‘கேரளா ஸ்டோரி’.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..
சினிமா

தென்னிந்தியாவில் சர்ச்சை.. வட இந்தியாவில் ஆதரவு.. - 37 நாடுகளில் நாளை வெளியாகும் ‘கேரளா ஸ்டோரி’.. – வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..
சினிமா

வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் 2 .. முக்கிய காட்சிகள் உருவான விதம் – படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..