விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தில் மறைந்த லட்சுமி யானை.. – ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வரும் வீடியோ இதோ..

பிச்சைக்காரன் 2 படத்தில் மறைந்த புதுச்சேரி யானை Manakulla vinayagar temple elephant in Pichaikkaran 2 song | Galatta

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து இயக்கி வரும் ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் பிச்சைக்காரன் 2.  விஜய் ஆண்டனி திரைபயனத்தில் நடிகராக நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்து வெளியிடவுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து காவியா தப்பர், ராதா ரவி, மன்சூர் அலிகான், ஹரிஷ் பெரடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு, YG.மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனியே படத்தொகுப்பும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான கதைகளத்தில் சமூக அக்கறையை பேசும் திரைப்படமாக பிச்சைக்காரன் 2 உருவாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.இந்நிலையில் நேற்று படத்தில் இடம் பெற்றுள்ள பிக்கிலி பாடலை வெளியிட்டுள்ளார். விஜய் ஆண்டனி இசையில் அவரே எழுதி பாடியிருக்கும் பாடல் தற்போது ரசிகர்கள் பெரும்பாலும் வைரலாக்கி வருகின்றனர். சிறப்பு ஆல்பம் பாடலாக வெளியாகிருக்கும் பிக்கிலி  வீடியோ பாடல் முழுக்க முழுக்க பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில் பாண்டிச்சேரி புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் சில காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில் மணக்குள விநாயகர் கோவிலின் மறைந்த யானை லட்சுமியின் காட்சி இடம் பெற்றுள்ளது. இதனை கண்டறிந்த ரசிகர்கள் அந்த காட்சியினை நெகிழ்ச்சியுடன் இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்  

cinematographer sr kathir joins superstar rajinikanth thalaivar 170கேரளா திருவனந்தபுரத்திலிருந்து 5 வயது யானையை 1997 ல் தனியார் நிறுவனம் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு வழங்கியது. லட்சுமி என்று பெயரிடப்பட்ட யானை அக்கோவிலின் பிரபலமாக மாறியது. பெரும்பாலான பக்தர்கள் லட்சுமி யானையுடன் ஒரு தனி அக்கறையை கொண்டிருந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மணக்குள விநாயகர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும், யானை லட்சுமியை தரிசிக்காமல் சென்றதில்லை. இதில் அதிகாரிகள் பிரபலங்களும் அடங்குவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிப்படைந்த லட்சுமி யானை கடந்த நவம்பர் மாதம் மரணமடைந்தது. இந்த நிகழ்வு புதுச்சேரி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த லட்சுமி யானை மக்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து கொண்டு அடக்கம் செய்யப்பட்டது. கண்ணீருடன் வழியனுப்பி வைக்கப்பட்ட யானை உயிருடன் எடுக்கப்பட்ட பிச்சைக்காரன் பாடல் காட்சியை மக்கள் தற்போது பார்த்ததால் நெகிழ்ச்சியுடன் அந்த காட்சியை பகிர்ந்து வருகின்றனர். 

வருகிறார் வந்தியத்தேவன்..  பொன்னியின் செல்வன் 2 படத்தின் 1st Single அப்டேட்.. – வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

வருகிறார் வந்தியத்தேவன்.. பொன்னியின் செல்வன் 2 படத்தின் 1st Single அப்டேட்.. – வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

உதயநிதி ஸ்டாலினின் விறுவிறுப்பான கண்ணை நம்பாதே... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

உதயநிதி ஸ்டாலினின் விறுவிறுப்பான கண்ணை நம்பாதே... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் அசத்தலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

“சூர்யா 42 முக்கியமான படமாக இருக்க போகுது..” மதன் கார்க்கி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரலாகும் முழு வீடியோ இதோ..
சினிமா

“சூர்யா 42 முக்கியமான படமாக இருக்க போகுது..” மதன் கார்க்கி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. – வைரலாகும் முழு வீடியோ இதோ..