"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் வசூலை தளபதி விஜயின் லியோ தாண்டுமா?"- தயாரிப்பாளர் SSலலித்குமாரின் கருத்து இதுதான்! வீடியோ உள்ளே

ஜெயிலர் லியோ வசூல் குறித்து பேசிய தயாரிப்பாளர் லலித் குமார்,producer ss lalit kumar about jailer leo box office comparison | Galatta

தளபதி விஜயின் திரை பயணத்தில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம்  கடந்த  அக்டோபர் 19ஆம் தேதி ஆயுதபூஜை வெளியீடாக உலகம் எங்கும் மிகப் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது. கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். 

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப் படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் இந்த பெரிய வரவேற்பால் லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கும் நிலையில், அந்த சாதனையை லியோ திரைப்படம் தாண்டுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது

இந்த நிலையில், நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் நம்மோடு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில், "ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது ரிலீஸான பிறகு அந்த படம் ஒரு குறிப்பிட்ட கலெக்ஷன் எடுக்கிறது. அதன் பிறகு எல்லோரும் கேட்கிற ஒரு கேள்வி என்னவென்றால் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது அது இவ்வளவு கலெக்சன் எடுத்துவிட்டது. இதை லியோ திரைப்படம் தாண்டுமா என்பது தான்? இந்த ஒப்பீடு அதிகமாக பேசப்பட்டது... இதை கண்டிப்பாக நீங்களும் கேட்டிருப்பீர்கள் அல்லவா இது தயாரிப்பாளராக உங்களுக்கு எப்படி இருந்தது? யார் முன்னே பின்னே என்ன நீங்களும் யோசித்தீர்களா?" என கேட்டபோது, “பார்த்தீர்கள் என்றால் அது மாதிரி நான் யோசிக்கவே இல்லை நான் செய்யக்கூடிய ப்ராஜெக்ட் அது நல்ல நம்பர் (வசூல்) பண்ண வேண்டும் அதைத்தான் நான் திட்டமிட்டு வைத்திருந்தேன். அது எவ்வளவு தொடுகிறது அதற்காக சிறந்த முயற்சி என்ன செய்ய வேண்டும் என செய்து கொண்டிருக்கிறேன். இன்னொரு படத்துடன் நான் ஒப்பிடுவதில்லை. நாம் என்ன படம் பண்ணுகிறோம் அந்த படம் என்ன ரீச் பண்ண முடியும் அப்படித்தான் நான் பார்க்கிறேன்" என்றார். இன்னும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்ட லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவித்குமார் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.