ராஷ்மிகா மந்தனாவின் 23 வது படம்!- இதுவரை கேட்டிடாத பார்த்திராத காதல் கதையாக உருவாகும் புதிய பட அசத்தலான டைட்டில் & முதல் GLIMPSE இதோ!

ராஷ்மிகா மந்தனாவின் 23 ஆவது பட டைட்டில் முதல் GLIMPSE வெளியீடு,rashmika mandanna 23rd movie the girl friend first glimpse | Galatta

இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திரை பயணத்தில் 23 ஆவது படமாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் GLIMPSE வெளியானது. கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்ட நாயகனாக நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து கன்னட மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமடைந்த நடிகை ராஸ்மிகா மந்தனா தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்திலும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஸ்ரீவல்லி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் மிகப் பிரபலம் அடைந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கடைசியாக சமீபத்தில் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வந்த வாரிசு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கும் அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா வந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த அனிமல் திரைப்படம் வருகிற டிசம்பர் 1ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புஷ்பா திரைப்படத்தின் 2வது பாகமாக உருவாகும் புஷ்பா 2 - தி ரூல் திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தின வெளியீடாக புஷ்பா-2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தெலுங்கில் ரெயின்போ எனும் புதிய திரைப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த வரிசையில் ராஷ்மிகா மந்தனா தனது 23 வது படமாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் GLIMPSE வெளியானது.

கதையின் நாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு தி கேர்ள் ஃப்ரெண்ட் என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல நடிகரும் இயக்குனருமான ராகுல் ரவீந்திரன் எழுதி இயக்கும் இந்த தி கேர்ள் ஃப்ரெண்ட் திரைப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய பேஷன் அப்துல் வஹ்ஹாப் இசையமைக்கிறார். விரைவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என படக் குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். மேலும் இதனை அறிவிக்கும் வகையில் தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தின் GLIMPSE முதல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் நீருக்குள் மூழ்கிய படி சிரித்த முகத்தோடு ராஷ்மிகா மந்தனா இருக்கிறார்.  அடுத்த சில வினாடிகளில் அவரது சிரிப்பு கலைகிறது. அடுத்தடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 23 வது படமாக உருவாகும் இந்த தி கேர்ள் ஃப்ரெண்ட் திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்தின் GLIMPSE வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. அந்த GLIMPSE வீடியோ இதோ…