"வேர்ல்ட் கிளாஸ்!"- சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட டீசருக்கு முதல் விமர்சனம் கொடுத்த முன்னணி தயாரிப்பாளர்! விவரம் உள்ளே

சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான் பட டீசருக்கு முதல் விமர்சனம்,dhananjeyan shared first review of thangalaan teaser | Galatta

சீயான் விக்ரமின் தங்கலான் திரைப்படத்தின் டீசரை பார்த்த முன்னணி தயாரிப்பாளர் தனது முதல் விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக திகழும் சீயான் விக்ரம் அவர்கள் கடைசியாக இந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன்-2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக ரசிகர்களை கவர்ந்தார். அதைத் தொடர்ந்து சீயான் விக்ரம் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணிகளில் உருவாகி நீண்ட காலமாக ரிலீசுக்காக காத்திருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் தான் தங்கலான்.

1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பீரியட் ஆக்சன் படமாக இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான் படம் இந்திய சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத அட்டகாசமான அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் உடன் இணைந்து பார்வதி, பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் தங்கலான் பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருவதும் குறிப்பிடத்தக்கது. PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட  பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

மேலும் ஆஸ்கார் உட்பட ஒன்பது உயரிய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் தங்கலான் திரைப்படத்தை எடுத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கின்றனர். கடந்த ஜூலை 4ம் தேதி விறுவிறுப்பாக மதுரையில் நடைபெற்ற தங்கலான் திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று முழுவீச்சில் வருகின்றன. தொடர்ந்து தங்கலான் திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்காகவும் டீசர் மற்றும் பாடல்களுக்காகவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே தங்கலான் திரைப்படத்தின் டீசர் தற்போது தயாராகி வருவதாகவும் விரைவில் வெளிவர இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளிவந்தன. 

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் தற்போது தங்கலான் திரைப்படத்தின் டீசரை பார்த்து விட்டு தனது முதல் விமர்சனத்தையும் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிவில், “இப்போது தான் தங்களான் டீசர் பார்த்தேன். பா. ரஞ்சித், சீயான் விக்ரம், ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் படக்குழுவினரின் வேர்ல்ட் கிளாஸ் மற்றும் அட்டகாசமான உழைப்பு. ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் இந்த பதிவால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர். எனவே தங்கலான் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் தனஜெயன் அவர்களின் தங்கலான் பட டீசர் குறித்த விமர்சனம் இதோ… 
 

Just watched #thangalaan teaser . World class & extraordinary effort by @beemji @chiyaan @gvprakash & Team🔥👏👌

Waiting to announce the release date 👍 @StudioGreen2

— G Dhananjeyan (@Dhananjayang) October 21, 2023