தளபதி விஜய் படங்களையும் மற்ற ஹீரோ படங்களையும் தயாரிப்பத்தில் என்ன வித்தியாசம்?- லியோ தயாரிப்பாளர் லலித் குமாரின் பதில் இதோ!

விஜய் படங்களை தயாரிப்பது பற்றி லியோ தயாரிப்பாளர் லலித்குமார் பதில்,leo producer ss lalit kumar about vijay and other actors movies | Galatta

ஒரு திரைப்படத்திற்கு முதல் அறிவிப்பு வருவதற்கு முன்பிருந்தே எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கும் என்றால் அப்படிப்பட்ட இந்திய படங்களில் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் படமாக லியோ இருக்கும் என சொல்லலாம். மாஸ்டர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கும் தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் பக்கா ஆக்சன் பிளாக் திரைப்படமாக வெளிவந்துள்ள இந்த லியோ திரைப்படத்தில்  தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், அனுராக் காஷ்யப், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மரியான், அபிராமி வெங்கடாசலம், ஜாஃபர் சாதிக், மாயா கிருஷ்ணன், சாந்தி மாயாதேவி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் லியோ திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் லியோ திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீசான தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட லியோ படத்தின் தயாரிப்பாளர் SS.லலித் குமார் அவர்கள் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், “தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பதற்கும் மற்ற ஹீரோ ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பதற்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?” என்று கேட்ட போது,

“விஜய் சார் படம் தயாரிப்பது என்பது ரொம்ப ஈஸியானது என இப்போது நான் உணர்கிறேன். ஒரு COMFORT ZONE, இதுவரை இரண்டு படங்கள் தயாரித்து விட்டேன். விஜய் சாரை பொறுத்த வரைக்கும் எனக்கு ஒரு COMFORT ZONE இருக்கிறது. COMFORT ZONE இருக்கிறது என்றால் ஒரு ஒரு படப்பிடிப்பு திட்டமிடுகிறோம் என்றால் முதலில் ஒரு 22 நாள் தான் படப்பிடிப்புக்கு வருவார். அந்த 22 நாட்கள் எந்த இடைவெளியும் இல்லாமல் நாங்கள் படப்பிடிப்பு நடத்தி விடுவோம். ஒரு படமாக மிகவும் சரியாக முடிந்துவிடும். நாம் திட்டமிட்டபடியே படம் சரியாக முடிந்து விடும். முதல் 22 நாட்கள் படப்பிடிப்புக்கு வருவார் அந்த 22 நாட்களில் ஞாயிற்றுக்கிழமையோ அல்லது விடுமுறை நாட்களோ எது இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து படபிடிப்பு நடத்துவோம். அப்போது நான் எப்படி திட்டமிடுகிறேனோ அப்படி அந்த படப்பிடிப்பை முடித்து விடுவேன். இன்று வந்து இப்படி ஒரு படத்தை ஒரு பத்து மாதத்தில் முடித்து ரிலீஸ் செய்வது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இதுக்கு முக்கிய காரணம் விஜய் சாரோட டேட் தான். அந்த ஒரு சரியான டேட் கொடுத்ததால் தான் ஒரு பிளான் பண்ணுவதற்கும் ஈசியாக இருக்கும். படப்பிடிப்பு நாட்கள் குறைந்தாலே அந்த படத்தின் பட்ஜெட்டில் இருந்து வட்டியிலிருந்து எல்லாமே குறையும் எனவே ரிலீஸ் பண்ணுவதற்கும் ஒரு பிளான் செய்து போவது என்பது சரியா இருக்கும்.” என்று பதிலளித்தார். மேலும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர்கள் லலித் குமார் அவர்களின் அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.