தளபதி விஜயின் லியோ பட LOKIVERSE 2.0... லோகேஷ் கனகராஜின் LCU ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனிருத்! அட்டகாசமான GLIMPSE இதோ

தளபதி விஜயின் லியோ பட LOKIVERSE 2.0 வெளியீடு,Thalapathy vijay in leo movie lokiverse 2 point 0 out now | Galatta

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த சூழலில் தற்போது கூடுதல் சர்ப்ரைஸாக லியோ திரைப்படத்திலிருந்து மற்றொரு புதிய GLIMPSE ஒன்றை இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் வெளியிட்டு இருக்கிறார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் ஆக்சன் ட்ரீட்டாக மட்டுமல்லாமல் பக்கா VISHUAL ட்ரீட்டாகவும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் லியோ திரைப்படம் இன்று அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக ரிலீஸ் ஆனது. தளபதி விஜய் அவர்களின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக வந்திருக்கும் இந்த லியோ திரைப்படம், ரிலீசுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவுகளை தொடங்கிய நிலையில் தற்போது அட்வான்ஸ் புக்கிங்கில் லியோ படம் புதிய சாதனை படைத்திருக்கிறது. அதேபோல் முதல் நாள் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்து இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு படமாக லியோ திரைப்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் - திரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணைந்திருக்கிறது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா அவர்களின் அட்டகாசமான ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். CG உதவியுடன் மிரளவைக்கும் கழுதைப்புலி உடனான ஆக்ஷன் காட்சி மிகவும் தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்கள் அனைவரும் அந்த காட்சியை புகழ்ந்து வருகின்றனர் அதேபோல் மற்றொரு முக்கியமான ஒரு சேசிங் காட்சியும் மிகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு இருந்து LCU என்ற யுனிவர்சின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த நிலையில் இந்த யுனிவர்சில் லியோ திரைப்படம் இருக்குமா என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பின. அவை அனைத்திற்கும் இன்று வெளிவந்த லியோ திரைப்படத்தில் பதில் கிடைத்திருக்கும் நிலையில் தற்போது கூடுதல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் லியோ திரைப்படத்திலிருந்து LOKIVERSE 2.0 என்ற புதிய சவுண்ட் ட்ராக் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் LCU கனெக்ட்டை குறிப்பிடும் வகையில் வெளிவந்த LOKIVERSE என்ற சவுண்ட் டிராக் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. தற்போது தளபதி விஜயின் லியோ திரைப்படமும் இந்த யுனிவர்சுக்குள் வருவதால் கூடுதல் ட்ரீட் கொடுக்கும் வகையில் LOKIVERSE 2.0 சவுண்ட் ட்ராக் வெளிவந்துள்ளது. இந்த அட்டகாசமான சவுண்ட் ட்ராக் தற்போது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அசத்தலான அந்த சவுண்ட் ட்ராக் இதோ…
 

Here is the full #LEO album 🥁https://t.co/SqX9CccypN

More tracks to keep coming in forthcoming days@actorvijay @Dir_Lokesh @trishtrashers @akarjunofficial @duttsanjay @7screenstudio @Jagadishbliss @SonyMusicSouth pic.twitter.com/zi7f8x8GA8

— Anirudh Ravichander (@anirudhofficial) October 19, 2023