வழக்கம்போல் இந்த முறையும் பிக்பாஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறவில்லை. எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. 18 போட்டியாளர்கள் களமிறங்கிய பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத்தின் கேப்டன்கள் தேர்வு, முதல் நாளில் நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளிலிருந்து தொடர்கிறது கடந்து வந்த பாதை சுற்று. 

முதல் நாளில் பாடகிகள் இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு அவர்களின் கடந்து வந்த பாதையை பகிரந்து போட்டியாளர்களை நெகிழ வைத்தனர். தொடர்ந்து நேற்று இமான் அண்ணாச்சி தனது கடினமான நிகழ்வுகளை கலகலப்பான நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.  சுருதியின் கடந்து வந்த பாதை போட்டியாளர்களை உருக வைத்தது. 

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோக்கள் வெளியானது. முன்னதாக வெளியான முதல் ப்ரோமோவில் நமீதா தன்னுடைய குடும்பம் மற்றும் சமூகம் என தனது வாழ்வின் மிகக் கொடுமையான கடுமையான நிகழ்வுகளை கண்ணீர் மல்க பகிர்ந்துக்கொள்ள, ஹவுஸ் மேட்ஸ்களும் கண் கலங்கினார்.

தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நடிகை பாவனி  தனது கணவர் மறைவுக்குப் பிறகு வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்து கண்ணீரோடு மதுமிதாவிடம் பேசிக்கொண்டிருக்க இதை கவனித்த பிரியங்கா, கலகலப்பாகப் பேசி பாவனியை சிரிக்கவைக்கும் அழகிய ப்ரோமோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.