“அந்த பழக்கத்தினால் தான் எல்லாமே” முதல் முறையாக உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் – வைரலாகும் வீடியோ உள்ளே..

உடல்நிலை குறித்து உண்மையை உடைத்த ரோபோ சங்கர் வீடியோ உள்ளே - Robo Shankar open up about his health condition | Galatta

தமிழ் தொலைக்காட்சிகளில் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலங்களில் முக்கியமானவர் ரோபோ சங்கர். மேடை விழாக்களில் கலந்து கொண்டு பங்கேற்று வந்த ரோபோ சங்கர் தொலைகாட்சி நிகழ்சிகளில் அறிமுகமாகி பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான அது இது இது நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பின் பல நிகழ்சிகளில் பங்கேற்று ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்றார். இதனிடையே தனுஷ் நடித்து வெளியான மாரி படத்தில் நடித்து திரையுலகிலும் நகைச்சுவை நடிகராக கவனம் பெற்றார். ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர்  தற்போது முன்னணி நடிகர்களோடு வெள்ளி திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து தொலைக்காட்சியிலும் திரைப்படங்களிலும் பங்கேற்று வந்த ரோபோ சங்கர் அவருக்கென்ற தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது.

ரோபோ சங்கர் உடல் நிலை குறித்து சமீப காலமாக பல செய்திகள் பரவி வந்தது. திடீரென்று ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஆள் அடையாளமே தெரியாமல் இருந்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மேலும் ரோபோ சங்கர் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி வைரலானது. இடையே அவர் எந்தவொரு பொது நிகழ்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் இதனிடையே உடல் நிலை நலம் கருதி சிகிச்சை பெற்று வருவதாகவும் நெருங்கிய வட்டாரம் தகவல் பகிர்ந்தனர்.

இந்நிலையில் உடல்நிலை முன்னேறி பின் பொது நிகழ்வுகளில் ரோபோ சங்கர் கலந்து கொண்டு வருகிறார். அதன்படி ரோபோ சங்கர் ஒரு நிகழ்வில் தனது மாற்றத்திற்கான காரணம் குறித்து கலந்துரையாடினார், அதில் அவர் பேசியது,

“அந்த காலத்தில் மம்மட்டியை பிடிச்சு  பெண்கள் குணிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்து வீட்டுலையும் 15 பிள்ளைய பெத்தெடுத்து வாழ்ந்துருக்காங்க னா அவ்ளோ வவிமையா இருந்திருக்காங்க.. அதற்கு காரணம் நல்ல உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல பழக்கவழக்கங்கள். 

நான் உடல் குறைத்தது ஒரு படத்திற்காக குறைத்தேன். இதனிடையே மஞ்சள்காமாலை வந்துவிட்டது. 5 மாதம்‌ படுத்த படுக்கை.. நான் சாவின் விளிம்பிற்கே வந்துவிட்டேன். அதற்கு காரணம் என்கிட்ட இருந்த சில கெட்ட பழக்கங்கள். அந்த பழக்கத்திற்கு நான் அடிமையாகிவிட்டேன். 

நான் உங்களுக்கு உதாரணமாக இருப்பேன்னு நினைக்கிறேன்.  நான் தற்கொலை செய்யும் அளவுலாம் சென்றுவிட்டேன். ஜனவரி மாதம் லாம் என்னெல்லாம் அந்த பழக்க வழக்கங்கள் இல்லாமல் இருக்க முடியல..  நடுராத்திரியில் வீட்டிலே சுத்த ஆரம்பிச்சிட்டேன். அந்த நேரத்தில்  நக்கீரன் கோபால் சார் என்னை அழைத்து மருத்துவமணையில் சேர்த்தார். என் இரத்தத்தில் பெரிய அளவு மஞ்சள் காமாலை இருந்தது. கெட்ட பழக்கமும் இருந்தது தெரிய வந்தது.  எல்லா பழக்கத்தையும் விடவைத்து என் குடும்பம் என்னை பார்த்து கொண்டது. நண்பர்களுடைய பிராத்தனைகள் தான் என்னை காப்பாத்துச்சு.. இன்னிக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. சந்தோஷமா இருக்கேன் குடும்பத்தோட ஜாலியா இருக்கேன்.” என்றார் ரோபோ சங்கர்.

 

34 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘கரகாட்டக்காரன்’..  - சிறப்பு கட்டுரை உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

34 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ‘கரகாட்டக்காரன்’.. - சிறப்பு கட்டுரை உள்ளே..

மாபெரும் வெற்றியுடன் பொன்னியின் செல்வன்.. ரசிகர்களை சர்ப்ரைஸ்  செய்த படக்குழு – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..
சினிமா

மாபெரும் வெற்றியுடன் பொன்னியின் செல்வன்.. ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த படக்குழு – இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் பொம்மை படத்தை பார்பதற்கான 5 முக்கிய காரணங்கள் - விவரம் உள்ளே.
சினிமா ஸ்பெஷல்ஸ்

எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் பொம்மை படத்தை பார்பதற்கான 5 முக்கிய காரணங்கள் - விவரம் உள்ளே.