அந்தகன் திரைப்பட படப்பிடிப்பு இடைவேளை சமயத்தில் படக்குழுவில் உள்ளவர்களுடன் பிரசாந்த் மற்றும் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரசாந்த், யோகிபாபு இருவருமே பந்துகளை சிக்சர், பவுண்டரி என அடித்து விளாசிய காட்சிகளும் அதிகம் பகிரப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அதிலும் மிக கச்சிதமாக பிரசாந்த் ஆஃப் ஸ்ப்பின்னரை போல் பந்து வீசுவது லைக்குகளை அள்ளி வருகிறது. இவர்களுடன் இயக்குனரும், நடிகருமான கே.எஸ்.ரவிக்குமாரும் கிரிக்கெட் விளையாடி உள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் நடந்து வரும் சமயத்தில், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. யோகிபாபு நல்ல கிரிக்கெட் பிளேயர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் கலந்துகொள்ளும் படப்பிடிப்புகளில் கட்டாயம் கிரிக்கேட் விளையாடி வீடியோ வெளியிடுவார். 

பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் அந்தாதூன். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜனே இந்த படத்தை இயக்கி வருகிறார். படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், மனோபாலா, சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் ஆகியோர் நடிக்கின்றனர். 

சென்னை மற்றும் புதுச்சேரியில் எடுக்க வேண்டிய சில காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கியிருப்பதாகவும் தகவல் தெரியவந்தது. கடைசியாக நவரச நாயகன் கார்த்திக் படத்தில் இணைந்த தகவல் தெரியவந்தது.