ஆரம்பமானது பிக்பாஸ் ஃபீவர், வழக்கம்போல் இந்த சீசனிலும் அறிவிப்பு வந்த நாள் முதலே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. தமிழில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை 4 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலகநாயகனே 5-வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இதனை அறிவிக்கும் விதமாக வெளிவந்த ப்ரோமோ மற்றும் டீசர் வீடியோக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களாக டிக்டாக் G.P.முத்து, நடிகர் சந்தோஷ் பிரதாப்,பாடகி சௌந்தர்யா , விஜய் டிவி பிரியங்கா என பல நட்சத்திரங்களின் பெயர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் முன்னதாக பிரபல நடிகை சூசன் ஜார்ஜ் மறைமுகமாக தான் பிக் பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக செல்ல இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் மற்றொரு பிரபல நடிகை பிக்பாஸ் குறித்து மனம் திறந்து பதிவிட்டுள்ளார். 

பிரபல இளம் நடிகையும் மாடலுமான நடிகை ப்ரடைநி சூர்வா பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக பல வதந்திகள் பரவி வந்த நிலையில் இவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக நடிகை ப்ரடைநி சூர்வா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை என திட்டவட்டமாக தெரிவிப்பது போல “உண்மையான போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். 

எனவே நடிகை ப்ரடைநி சூர்வா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மறுத்துள்ளார் என திட்டவட்டமாக தெரிகிறது. தொடர்ந்து இன்னும் பல நட்சத்திரங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by PRADAINI SURVA OFFICIAL (@pradainisurva)