அமெரிக்காவின் முக்கிய விழாவில் முதல் இந்திய திரைப்படம்..! பிரபாஸ், கமல் ஹாசன் நடிக்கும் ‘Project K’ படக்குழுவின் அட்டகாசமான அறிவிப்பு..

பிரபாஸ் கமல் ஹாசன் நடிக்கும் Project K படத்தின் டைட்டில் அறிவிப்பு வைரல் -  Prabhas Kamal haasan project k movie title announcement | Galatta

இந்திய ரசிகர்களால் கொண்டாடப் படும் பிரபாஸின் நடிப்பில் ஆதிபுருஷ் படத்தையடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘புரோஜக்ட் கே’. மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவிருக்கும் இப்படத்தினை தேசிய விருது பெற்ற மகாநடி பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு வில்லனாக உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கவுள்ளார். மேலும் பாலிவுட் நடிகர்கள் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், தீஷா பதானி என பான் இந்திய நட்சத்திரங்கள் அணி திரண்டு இப்படத்தில் நடித்து வருகின்றனர். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்திய சினிமாவில் இது வரை பார்த்திடாத கதைகளத்தில் சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகிவரும் புரோஜக்ட் கே திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.  அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையையோட்டி ஜனவர் 14 ல் பான் இந்திய திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டே வரும் புரோஜக்ட் கே திரைப்படத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் இணைந்தது படத்திற்கு மேலும் சுவாரஸ்யம் கூட்டி ஆவலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் புரோஜக்ட் கே படத்தின் டைட்டில், டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முன் வந்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் ஜூலை மாதம் 20ம் தேதி அமெரிக்காவில் சான் டியாகோ நடைபெறவுள்ள காமிக் கான் என்ற சர்வதேச மாநாட்டில் டைட்டில் மற்றும் டீசர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. உலக ரசிகர்களின் விருப்ப மேடையான காமிக் கான் மேடையில் முதல் முறையாக மேடையேறும் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பிரபாஸின் புரோஜக்ட் கே திரைப்படம் தற்போது பெற்றுள்ளது.

𝐏𝐑𝐎𝐔𝐃 𝐌𝐎𝐌𝐄𝐍𝐓!

San Diego @Comic_Con, here we come.#ProjectK #Prabhas @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @Music_Santhosh @AshwiniDuttCh @VyjayanthiFilms pic.twitter.com/uodkNyPmSk

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 6, 2023

 

இந்த நிகழ்வு குறித்து பிரபல பாலிவுட் நடிகரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் அமிதாப் பச்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில்,

“நான் இந்த பெருமைமிகு பிரம்மாண்ட தெலுங்கு திரையில் ஒரு பங்கு வகிப்பதில் கௌரமாக உணர்கிறேன்.  படக்குழுவினருக்கு நன்றி.. அன்பும் மரியாதையையும் பிரபாஸ் என் மீது காட்டுவது என்னை மிகவும் உணர்வு பூர்வாமாக உணர வைக்கிறது. “ என்று இந்த நிகழ்வு குறித்தும் புரோஜக்ட் கே படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இதையடுத்து காமிக் கான் நிகழ்வு குறித்து படக்குழு வெளியிட்டு அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது

T 4698 - I am honoured and have had the great privilege of being a part of this great enterprise in Telugu Cinema , ‘Project K’ and to have had the huge honour of being in the same frame of the Idol , Prabhas ..

Thank you all .. and thank you Nagi Sir, for thinking of me ..… https://t.co/7c5vbQ0i5I

— Amitabh Bachchan (@SrBachchan) July 7, 2023

சிலம்பரசன்TRன் சூப்பர் ஹிட் பட நாயகிக்கு பிறந்த அழகிய ஆண் குழந்தை... க்யூட்டான வீடியோவுடன் வந்த அறிவிப்பு! குவியும் வாழ்த்துகள்
சினிமா

சிலம்பரசன்TRன் சூப்பர் ஹிட் பட நாயகிக்கு பிறந்த அழகிய ஆண் குழந்தை... க்யூட்டான வீடியோவுடன் வந்த அறிவிப்பு! குவியும் வாழ்த்துகள்

தளபதி விஜயின் லியோ படத்தோடு கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... வேற லெவல் ரிலீஸ் அப்டேட் இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்தோடு கைகோர்க்கும் முன்னணி நிறுவனம்... வேற லெவல் ரிலீஸ் அப்டேட் இதோ!

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!
சினிமா

50வது படத்தை தானே இயக்கி நடிக்கும் தனுஷ்... பக்கா மாஸ் சர்ப்ரைஸாக வந்த D50 பட மிரட்டலான அறிவிப்பு போஸ்டர் இதோ!