கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாள் சர்ப்ரைஸ்... பிரபாஸின் சலார் படக்குழு வெளியிட்ட மிரட்டலான GLIMPSE இதோ!

இயக்குனர் பிரசாந்த் நீல் பிறந்தநாளுக்கு சலார் படக்குழுவின் ஸ்பெஷல் வீடியோ,salaar special video for kgf director prashanth neel birthday | Galatta

தனக்கென தனி பாணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் சலார் படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். பாகுபலி படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறிய போதும் பிரபாஸ் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. 

அந்த வகையில் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் ப்ராஜெக்ட் கே படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முன்னதாக ராமாயணத்தை கதைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் ஆதிபுரூஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்த வரிசையில் கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடிக்கும் சலாம் படத்தில் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த 2023 ஆம் ஆண்டு வருட செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் சலார் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரம் திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பிரசாந்தனில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் ஒன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் இமாலய வெற்றி பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் இந்த சலாம் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜூன் நான்காம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடும் இயக்குனர் பிரசாந்த் நில் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசளிக்கும் விதமாக சலார் பட்டக்குழுவினர் அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ…
 

செம்ம COOL & MASS லுக்கில் சிலம்பரசன்TR... STR48 படத்திற்காக தயாராகிறாரா? சோசியல் மீடியாவை அதிரவிடும் புகைப்படங்கள் இதோ!
சினிமா

செம்ம COOL & MASS லுக்கில் சிலம்பரசன்TR... STR48 படத்திற்காக தயாராகிறாரா? சோசியல் மீடியாவை அதிரவிடும் புகைப்படங்கள் இதோ!

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக வரும் டக்கர்... துள்ளலான ரெயின்போ திரளில் வீடியோ பாடல் இதோ!
சினிமா

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னராக வரும் டக்கர்... துள்ளலான ரெயின்போ திரளில் வீடியோ பாடல் இதோ!

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!