மோசடி எச்சரிக்கை: ஹனுமான் இருக்கை - டிக்கெட் விலை குறித்த சர்ச்சைகளுக்கு ஆதிபுரூஷ் படக்குழு விளக்கம்!

ஹனுமான் இருக்கை குறித்த சர்ச்சைகளுக்கு ஆதிபுரூஷ் படக்குழு விளக்கம்,Prabhas in adipurush team clarifies controversy over hanuman ji seat | Galatta

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் ஆதிபுரூஷ் திரைப்படத்தின் ரிலீஸின் திரையங்குகளில் ஹனுமானுக்காக ஒரு இருக்கை ரிசர்வ் செய்யப்படுவது குறித்தும் அது அருகில் இருக்கும் மற்ற இருக்கைகளுக்கான விலை குறித்தும் பரவும் சர்ச்சைகள் பற்றி படக் குழுவினர் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். அதிரடி படமான சலார் படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தொடர்ந்து சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். ப்ராஜெக்ட் கே படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே உள்ளிட்டோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இதனிடையே ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் தான் ஆதிபுரூஷ். ராகவா எனும் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க ஜானகியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனான் நடித்துள்ளார். மேலும் மிரட்டலான ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து தேசிய விருது பெற்ற தன்ஹாஜி திரைப்படத்தின் இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் திரைப்படத்தை T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இதுவரை இல்லாத அளவிற்கு மிக பிரம்மாண்ட படைப்பாக பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் படத்திற்கு கிராபிக்ஸ் பணிகளுக்காகவே கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸாகும் ஒவ்வொரு திரையரங்குகளிலும் ஹனுமானுக்காக ஒரு இருக்கை ரிசர்வ் செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து அந்த இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கைகளுக்கு டிக்கெட் விலை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ள படக்குழு, மோசடி எச்சரிக்கை ஆதிபுரூஷ் டிக்கெட் விலை பரவி வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை. எனவே அனுமான் ஜி-க்கு ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும் சீட்டிற்கு அருகில் இருக்கும் மற்ற இருக்கைகளுக்கும் இதர இருக்கைகளுக்கும் எந்த விதமான மாற்றமும் டிக்கெட் உலகில் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம் ஜெய் ஸ்ரீ ராம் எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். அந்த பதிவு இதோ…
 

#FraudAlert 🚨

There are misleading reports circulating in the media regarding #Adipurush ticket pricing. We want to clarify that there will be no differences in rates for seats next to the one reserved for Hanuman Ji! Don't fall for false information!

Jai Shri Ram! 🙏🏹

— T-Series (@TSeries) June 11, 2023

அர்ஜுன் ரெட்டி இயக்குனருடன் கைகோர்த்த நட்சத்திர நடிகர்... கங்குவா ஸ்டன்ட் இயக்குனரின் அடுத்த படைப்பு! அதிரடி ப்ரீ-டீசர் இதோ
சினிமா

அர்ஜுன் ரெட்டி இயக்குனருடன் கைகோர்த்த நட்சத்திர நடிகர்... கங்குவா ஸ்டன்ட் இயக்குனரின் அடுத்த படைப்பு! அதிரடி ப்ரீ-டீசர் இதோ

‘தளபதி விஜய் கல்வி விருது விழா!’ 10-12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க பணிகள் தீவிரம்! விவரம் உள்ளே
சினிமா

‘தளபதி விஜய் கல்வி விருது விழா!’ 10-12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க பணிகள் தீவிரம்! விவரம் உள்ளே

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர்... காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர்... காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!