மான்ஸ்டர் வெற்றி கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... கவனத்தை ஈர்க்கும் புது SNEAK PEEK வீடியோ இதோ!

SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை பட SNEAK PEEK வீடியோ வெளியீடு,Sj suryah priya bhavani shankar in bommai movie new sneak peek video | Galatta

மான்ஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திலிருந்து புதிய SNEAK PEEK வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் அஜித்குமாரின் சூப்பர் ஹிட்டான வாலி திரைப்படத்திலிருந்து இயக்குனராக அறிமுகமான SJ.சூர்யா அவர்கள் தொடர்ந்து தளபதி விஜய் உடன் இணைந்த குஷி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து நடிகராகவும் அவதாரம் எடுத்த நியூ திரைப்படத்தை இயக்கி நடித்த SJ.சூர்யா அன்பே ஆருயிரே படத்தையும் இயக்கி நடித்தார். அடுத்தடுத்து பல படங்கள் ஹீரோ - வில்லன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் மிகச் சிறப்பாக நடித்து வரும் SJசூர்யா, Qஇயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர், தளபதி விஜய் நடிப்பில் மெர்சல், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன்.TR நடித்த மாநாடு, சிவகார்த்திகேயனின் டான் என சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் அடுத்ததாக விஷாலுடன் இணைந்து வித்தியாசமான டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக தயாராகி இருக்கும் மார்க் ஆண்டனி, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்க உருவாகி வரும் கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து மீண்டும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்த SJ.சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த தீபாவளி வெளியிட ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் தான் பொம்மை

மொழி மற்றும் அபியும் நானும் உட்பட பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் ராதா மோகன் பொம்மை படத்தை எழுதி இயக்கியுள்ளார். மான்ஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு SJ.சூர்யா & பிரியா பவானி சங்கர் இருவரும்  மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொம்மை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், அண்தோனி படத்தொகுப்பு செய்துள்ள பொம்மை திரைப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் கார்க்கி எழுதியுள்ளார். டாக்டர் V.மருது பாண்டியன், டாக்டர் ஜாஸ்மின் சந்தோஷ், மற்றும் டாக்டர் தீபா.T.துரை ஆகியோரது தயாரித்துள்ள பொம்மை திரைப்படத்தை ஏஞ்சல் ஸ்டுடியோ சார்பில் SJ.சூர்யா அவர்கள் வழங்குகிறார். SJ.சூர்யா நடிப்பில் நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த பொம்மை திரைப்படம் வரும் ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பொம்மை திரைப்படத்தின் SNEAK வீடியோ பாடல் தற்போது வெளியானது. கவனத்தை ஈர்க்கும் பொம்மை பட புது SNEAK PEEK வீடியோ இதோ…
 

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர்... காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர்... காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

சித்தார்த்தின் திரைப்பயணத்திலேயே டக்கர் படம் தான் டாப் டக்கர்... பக்கா மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

சித்தார்த்தின் திரைப்பயணத்திலேயே டக்கர் படம் தான் டாப் டக்கர்... பக்கா மாஸ் அப்டேட் இதோ!

பிரம்மாண்டமாக மிரட்டலான ஆக்ஷனில் ருத்ரன் தயாரிப்பாளரின் அடுத்த படம்... 2வது முறை இணையும் ஹிட் இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ
சினிமா

பிரம்மாண்டமாக மிரட்டலான ஆக்ஷனில் ருத்ரன் தயாரிப்பாளரின் அடுத்த படம்... 2வது முறை இணையும் ஹிட் இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ