"RIGHT IS BACK!"- சுந்தர்Cயின் பக்கா ஆக்சனில் வரும் தலைநகரம் 2 பட மிரட்டலான ட்ரெயலர் இதோ!

சுந்தர்Cயின் தலைநகரம் 2 பட ட்ரெயலர் வெளியீடு,Sundar c in thalainagaram 2 movie trailer out now | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராகவும் நடிகராகவும் திகழும் சுந்தர்.C அவர்கள் நடிப்பில் தயாராகி இருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் ஆல் டைம் ஃபேவரட் படங்களாக கொண்டாடப்படும் பல சூப்பர் ஹிட், என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சுந்தர்.C நடிகராகவும் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில், நடிகராக, நடிகர் ஜெயுடன் இணைந்து சுந்தர்.C நடித்த சைக்கோ த்ரில்லர் படமான பட்டாம்பூச்சி திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ஒன் 2 ஒன், வள்ளான் ஆகிய படங்கள் சுந்தர்.C நடிப்பில் வெளிவர இருக்கின்றன. மேலும் தனது அரண்மனை 4 படத்திலும் சுந்தர்.C முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனராக சுந்தர்.C இயக்கத்தில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு காபி வித் காதல் திரைப்படம் வெளிவந்த நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படம் விரைவில் தயாராக இருக்கிறது. ரசிகர்களின் ஃபேவரட்டான அரண்மனை சீரிஸில் 4வது பாகமாக தயாராகும் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக இயக்குனர் சுந்தர்.C களமிறங்கினார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக வெளிவந்த தலைநகரம் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் காலம் கடந்து ரசிக்கக்கூடிய காமெடி காட்சிகளாக ரசிகர்களை ரசிக்க வைத்த வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் தலைநகரம் திரைப்படத்திற்கு இன்னும் பலம் கூட்டியது. தலைநகரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தலைநகரம் 2 திரைப்படத்தில் சுந்தர்.C கதாநாயகனாக நடித்திருக்கிறார். கிட்டதட்ட 17 ஆண்டுகள் கழித்து தலைநகரம் 2 திரைப்படம் தற்போது தயாராகி உள்ளது. 

அஜித் குமாரின் முகவரி, சிலம்பரசன்.TRன் தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி, ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் மற்றும் சுந்தர்.C-யின் இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் VZ.துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் தலைநகரம் 2 திரைப்படத்தை ரைட் ஐ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் SM.பிரபாகரன் மற்றும் இயக்குனர் VZ.துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சுந்தர்.C உடன் இணைந்து பல்லாக் லால்வாணி கதாநாயகியாக நடிக்க, தம்பி ராமையா பாகுபலி பிரபாகர் ஆயிரா ஜெய்சி ஜோஸ் விஷால் ராஜன் சேரன் ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள தலைநகரம் 2 திரைப்படத்திற்கு E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், R.சுதர்சன் படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முன்னதாக தலைநகரம் 2 திரைப்படம் இந்த ஜூன் மாதத்தில் வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் வெகு விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தலைநகரம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது சுந்தர்.C.யின் பக்கா ஆக்சனில் வரவிருக்கும் தலைநகரம் 2 படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இதோ…
 

‘தளபதி விஜய் கல்வி விருது விழா!’ 10-12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க பணிகள் தீவிரம்! விவரம் உள்ளே
சினிமா

‘தளபதி விஜய் கல்வி விருது விழா!’ 10-12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க பணிகள் தீவிரம்! விவரம் உள்ளே

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர்... காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

சித்தார்த்தின் ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் டக்கர்... காதலுக்கு புது அர்த்தம் சொல்லும் கலக்கலான ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

சித்தார்த்தின் திரைப்பயணத்திலேயே டக்கர் படம் தான் டாப் டக்கர்... பக்கா மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

சித்தார்த்தின் திரைப்பயணத்திலேயே டக்கர் படம் தான் டாப் டக்கர்... பக்கா மாஸ் அப்டேட் இதோ!