அர்ஜுன் ரெட்டி இயக்குனருடன் கைகோர்த்த நட்சத்திர நடிகர்... கங்குவா ஸ்டன்ட் இயக்குனரின் அடுத்த படைப்பு! அதிரடி ப்ரீ-டீசர் இதோ

ரன்பீர் கபூரின் அனிமல் பட ப்ரீ டீசர் வெளியீடு,Ranbir kapoor in animal movie pre teaser out now | Galatta

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கும் அனிமல்  திரைப்படத்தின் ப்ரீ-டீசர் வெளியானது. கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி. தொடர்ந்து தமிழில் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாக ஆதித்ய வர்மா என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட அர்ஜுன் ரெட்டி ஹிந்தியில் நடிகர் ஷஹித் கபூர் கதாநாயகனாக நடிக்க கபீர் சிங் என பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்பட்டது.அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா கபீர் சிங் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குனராக களமிறங்கினார். அப்படத்தில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்திருக்கும் அனிமல திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா எழுதி இயக்கி இருக்கிறார். 

பத்ரகாளி பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், பிரனய் ரெட்டி வங்கா, முரட் கேட்டாணி மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த அனிமல் திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பின்னணி இசை கோர்த்து இருக்கிறார். ஒளிப்பதிவாளர் அமித் ராய் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படத்திற்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த அனிமல் திரைப்படத்தில் துணிவு , கங்குவா உள்ளிட்ட படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் சுப்ரீம் சுந்தர் அவர்கள் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ரன்பீர் கபூருடன் இணைந்து அணில் கபூர் மற்றும் பாபி தியால் ஆகியோர் முன்னணிக்குதா பாத்திரங்களில் நடித்திருக்கும் அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார். திரிப்தி டிமிரி, சக்தி கபூர், சுரேஷ் ஓபிராய் ஆகியோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர்.

ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக அனிமல் படத்தை வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படமும், அஜித் குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்திருக்கும் போலா ஷங்கர் திரைப்படமும் ரிலீஸாக இருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்திற்கான ரேசில் ஜெயிலர் மற்றும் போலா ஷங்கர் ஆகிய படங்களோடு ரனபீர் கபூரின் அனிமல் படமும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து இருக்கின்றனர். விரைவில் அனிமல் திரைப்படத்தின் டீசர் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அனிமல் திரைப்படத்தின் சிறிய முன்னோட்டமாக ப்ரீ டீசர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதிரடியான அந்த ப்ரீ டீசர் இதோ…
 

சித்தார்த்தின் திரைப்பயணத்திலேயே டக்கர் படம் தான் டாப் டக்கர்... பக்கா மாஸ் அப்டேட் இதோ!
சினிமா

சித்தார்த்தின் திரைப்பயணத்திலேயே டக்கர் படம் தான் டாப் டக்கர்... பக்கா மாஸ் அப்டேட் இதோ!

பிரம்மாண்டமாக மிரட்டலான ஆக்ஷனில் ருத்ரன் தயாரிப்பாளரின் அடுத்த படம்... 2வது முறை இணையும் ஹிட் இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ
சினிமா

பிரம்மாண்டமாக மிரட்டலான ஆக்ஷனில் ருத்ரன் தயாரிப்பாளரின் அடுத்த படம்... 2வது முறை இணையும் ஹிட் இயக்குனர்! அதிரடி அறிவிப்பு இதோ

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 படத்தில் இணைந்த கைதி & மாஸ்டர் பட நடிகர்... அட்டகாசமான அப்டேட் இதோ!
சினிமா

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 படத்தில் இணைந்த கைதி & மாஸ்டர் பட நடிகர்... அட்டகாசமான அப்டேட் இதோ!