பவா லக்ஷ்மணனை நெகிழ வைத்த KPY பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரல் வீடியோ உள்ளே..

பவா லக்ஷமணனுக்கு உதவிய விஜய் டிவி பாலா வைரல் வீடியோ உள்ளே - KPY Bala financial helps to actor bava lakshmanan | Galatta

தமிழ் சினிமாவில் வடிவேலு போன்ற காமடி ஜாம்பவன்களின் படங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நகைச்சுவை நடிகர் பவா லக்ஷ்மணன். சரத் குமார் நடிப்பில் வெளியான ‘மாயி’ படத்தில் இடம் பெற்ற ‘வா மா மின்னல்’ காமெடி காட்சியை இன்றும் ரசிகர்கள் யாரும் மறந்திட மாட்டார்கள். அந்த காட்சியின் சுவாரஸ்யத்தை கூட்டியவர் பவா லக்ஷ்மணன்.

பல ஆண்டுகளாக வயிறு குலுங்க சிரிக்க வைத்த பவா லக்ஷமணன் சமீப காலமாக பட வாய்புகள் ஏதும் அமையாமல்  பொருளாதார சிக்கல்களை சந்தித்து வறுமையில் இருந்து வந்தார். இவருக்கு சக்கரை நோய் இருந்து வந்துள்ளது அதற்கான சிகிச்சையையும் எடுத்து வந்துள்ளார் நடிகர் பவா லக்ஷ்மணன். ஒரு கட்டத்தில் சர்க்கரை நோய் முற்றி போக பவா லக்ஷ்மணன் கால் கட்டை விரல் அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்படி சென்னை ஓமந்தூராரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார் நடிகர் பவா லக்ஷ்மணன்.

இந்த செய்தி திரையுலகினை அதிர்ச்சியடைய செய்தது, மேலும் ரசிகர்கள் இவரது உடல் நலம் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிராத்தனைகளையும் செய்து வருகின்றனர்.

இதையறிந்து பவா லக்ஷ்மணன் அவர்களை திரை பிரபலங்கள் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி கலக்க போவது யாரு மற்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த பாலா நேரில் சென்று பவா லக்ஷமணனை சந்தித்துள்ளார்.

பவா லக்ஷமணனை சந்திக்க வருபோது பாலாவின் வங்கி கணக்கில் ரூ 32,000 மட்டுமே இருந்ததாகவும் அதில் 2 ஆயிரம் ரூபாய் பெட்ரோல் போட்டு விட்டு  மீதி 30 ஆயிரம் அப்படியே கையில் கொடுத்துள்ளார். மேலும் வேறு ஏதாவது உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்று பேசி பாலா பவா லக்ஷமணனுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தார். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பாலாவின் இந்த நல்ல செயல் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு பாலாவிற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

பொதுவாகவே விஜய் டிவி பாலா சமூக தொண்டுகளை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். இவர் தொலைக்காட்சி மூலம் சம்பாதிப்பதை ஆதரவற்ற குழந்தைகளுக்கும் மற்றும் இது போன்ற நல தொண்டு செயல்களுக்கும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பவா லக்ஷமணன் அவர்கள் அவரது உடல்நிலை குறித்து பேசிய முழு வீடியோவை காண..

 

பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!
சினிமா

பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!

மகன் ‘மீர்’ உடன் அட்லி..  தந்தையர் தின வாழ்த்து கூறிய ப்ரியா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

மகன் ‘மீர்’ உடன் அட்லி.. தந்தையர் தின வாழ்த்து கூறிய ப்ரியா.. – வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே..

சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் மிரட்டும் வசந்த் ரவி.. – வெளியானது அஸ்வின்ஸ் பட டிரைலர்..!
சினிமா

சைக்காலஜிக்கல் திரில்லர் கதைகளத்தில் மிரட்டும் வசந்த் ரவி.. – வெளியானது அஸ்வின்ஸ் பட டிரைலர்..!