கல்வி விருது விழாவிற்கு குவியும் பாராட்டுகள்.. தளபதி விஜயிடன் வேண்டுகோள் வைத்த பிரபல இயக்குனர்..!

தளபதி விஜயிடம் வேண்டுகோள் விடுத்த பிரபல இயக்குனர் விவரம் உள்ளே - Director Seenu ramasamy request to thalapathy vijay | Galatta

கடந்த ஜூன் 17 அன்று சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளஆர் கே கன்வென்ஷன் சென்டரில் தளபதி விஜய் தலைமையில் 234 தொகுதிகளிலிருந்து நடந்து முடிந்த  பொது தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்களை எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது விழா நடைபெற்றது. பிரம்மாண்ட அரங்கில் மாணவர்கள் அவரது பெற்றோர்களுக்கு அறுசுவை விருந்து வழங்கி பின் மாணவர்களின் கல்விக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த விழாவில் 6000 மாணவ மாணவியர்கள் தளபதி விஜய் பொன்னாடையிட்டு ஊக்க தொகை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கல்விக்கு ஊக்கமளிக்கும் வகையில் விஜயின் இந்த செயல் நாடு முழுவதும் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. மேலும் பல அரசியல் ஆளுமைகள், திரை பிரபலங்களிடமிருந்து கருத்துகளுடன் பாராட்டுகளும் குவிந்து வந்தது. இந்நிலையில் தமிழ் திரையுலகில் குரிப்பிடதக்க இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி அவர்கள் தளபதி விஜயின் இந்த செயலை பாராட்டி பின் அவரிடம் வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் சீனு ராமசாமி,

“கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' இளைய தளபதி.. உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன் .. என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சீனு ராமசாமி அவர்களின் பதிவு ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் இந்த வேண்டுகோளுக்கு நேர்மறையான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா'
இளைய தளபதி @actorvijay
உங்களை வாழ்த்துகிறேன்.

தங்கள் நடிப்பில்
புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல்
தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின்
Content Based Realistic படங்களை
தயாரித்து
சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர… pic.twitter.com/GJRZovMIxV

— Seenu Ramasamy (@seenuramasamy) June 18, 2023

இயக்குனர் சீனு ராமசாமி, தமிழ் சினிமாவில் அழுத்தமான கதைகளை கொண்டு தரமான நேர்த்தியான திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர். இவரது ஒவ்வொரு படங்களும் காலத்தை தாண்டியும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் திரையுலகில் மிக முக்கிய படங்களாக இருந்து வருகின்றது. முன்னதாக மக்கள் செல்வன் விஜய் செதுபதி கூட்டணியில் மாமனிதன் என்ற படத்தை இயக்கியிருந்தார். வசூல் அடிப்படையில் வரவேற்பு இல்லையென்றாலும் உலக மேடைகளில் விருதுகளால் இப்படம் அலங்கரித்துக் கொண்டே இருக்கின்றன. தற்போது இயக்குனர் சீனு ராமசாமி ஜிவி பிரகாஷ் குமார் கூட்டணியில் ‘இடி முழக்கம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

“ரசிகர்களின் உணர்வுகள் தான் முக்கியம்..” விமர்சனத்தை எதிர்கொள்ள ‘ஆதிபுருஷ்’  படக்குழுவின் அதிரடி நடவடிக்கை..!
சினிமா

“ரசிகர்களின் உணர்வுகள் தான் முக்கியம்..” விமர்சனத்தை எதிர்கொள்ள ‘ஆதிபுருஷ்’ படக்குழுவின் அதிரடி நடவடிக்கை..!

விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ -  வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சினிமா

விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ - வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!
சினிமா

பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்.. மனைவி கைது.. எதிர்பாராத திருப்பங்களுடன் தொடரும் போலீஸ் விசாரணை..!