“சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல..” சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த திருமலை பட இயக்குனர் ரமணா.. - Exclusive interview உள்ளே..

திருமலை படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த ரமணா வீடியோ உள்ளே - Director Ramana about thalapathy Vijay in Thirumalai movie | Galatta

கடந்த 2003 ல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திருமலை’ சாக்லேட் பாயாகவும் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக விஜய் முதல் முறையாக அதிரடி ஆக்ஷன் நாயகனாகவும் தனித்துவமான ஸ்டைலில் சென்னை வாலிபராகவும் நடித்து வெளியான திரைப்படம் ‘திருமலை’. ரசிகர்கள் கொண்டாடி வரும் கில்லி திரைப்படத்திற்கு முன்பே தளபதி விஜய் கதாபாத்திரத்தில் வித்யாசம் கொடுத்து கவனம் ஈர்திருப்பார். இயக்குனர் ரமணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ஜோதிகா, ரகுவரன், கவுசல்யா, கருணாஸ், விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருப்பார். விஜய் திரைப்பயணத்தில் ரசிகர்கள் மத்தியில் மிக முக்கியமான படமாக திருமலை திரைப்படம் இருந்து வருகிறது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றாலும் இன்றும் ரசிகர்களிடையே திருமலை படத்திற்கு வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் திருமலை, சுள்ளான், ஆதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரமணா நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு திருமலை திரைப்படம் குறித்தும் தளபதி விஜயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான பகிர்ந்து கொண்டார். அதில் திருமலை படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சிகரெட் காட்சி படமானது குறித்து பேசிய இயக்குனர் ரமணா,

சிகரெட் எடுக்குற சீன் உண்மையிலே நான் சொல்லல.. அன்னிக்கு முட்டுகாடுல முதல்நாள் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தோம். மதிய உணவு இடைவெளி அப்போ, எல்லோரு சாப்டுட்டு இருந்தோம். அப்பறம் விஜய் சார் என்னை கூப்டு நான் ஒன்னு காட்றேன்.‌ அது ஓகே வா இருக்கானு பாருங்க என்றார்.  அப்போ அந்த சட்டை காலர்ல இருந்து சிகரெட் எடுக்குறத செஞ்சி காட்டுனார். நான் சூப்பர் சார்  னு சொன்னேன். அப்போ சார் சொன்னார்.‌ இது படத்துல வைக்கலாமா? கதைக்கு எதுவும் ஆகமல் என்று கேட்டு அதை படத்துல வெச்சோம்.

அது ரஜினி சார் துண்டை தோள் மேல போடுறா மாதிரியும் சிகரெட்டை பத்த வைக்கும் போது வரும் உணர்வு இந்த காட்சிக்கும் வந்தது. அவருடைய ரசிகருக்கு எதாவது ஒரு சின்ன சின்ன சுவராஸ்யம் கொடுக்கனும் னு விஜய் சார் நினைச்சு அத பன்றார். அதற்காக யோசிச்சிட்டே இருந்தார். எனக்கு மறக்க முடியாத விஷயம் அவருகிட்ட இருந்து வந்த கமர்ஷியல் விஷயம் தான். எனக்கு அந்த படத்துல முழு சுதந்திரத்தை அவர் கொடுத்தார்.

எனக்கு கேன்சர் னு தெரிஞ்ச உடனே மழையில் விஜயும் சங்கீதாவும் என்னை வந்து பார்த்தார்கள்.  வந்து பேசி உடனே லண்டனுக்கு சிகிச்சைக்கு கூப்டு வந்துட்டார். 30 நிமிடத்தில் இதை செய்தார்கள். ஒரு உயரத்திற்கு போறது ரொம்ப கஷ்டம் . அதே உயரத்தை தக்க வைத்து கொள்வது அதை விட கஷ்டம்.  அவரு அவருக்கு உண்மையா இருக்கார். அதுதான் உலகத்துல ரொம்ப முக்கியம். என்றார்  இயக்குனர் ரமணா.

மேலும் இயக்குனர் ரமணா அவர்கள் தன் திரைபயணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

பவா லக்ஷ்மணனை நெகிழ வைத்த KPY பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

பவா லக்ஷ்மணனை நெகிழ வைத்த KPY பாலா.. குவியும் பாராட்டுகள்.. – வைரல் வீடியோ உள்ளே..

“ரசிகர்களின் உணர்வுகள் தான் முக்கியம்..” விமர்சனத்தை எதிர்கொள்ள ‘ஆதிபுருஷ்’  படக்குழுவின் அதிரடி நடவடிக்கை..!
சினிமா

“ரசிகர்களின் உணர்வுகள் தான் முக்கியம்..” விமர்சனத்தை எதிர்கொள்ள ‘ஆதிபுருஷ்’ படக்குழுவின் அதிரடி நடவடிக்கை..!

விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ -  வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!
சினிமா

விமர்சனங்களை தாண்டி வசூல் வேட்டையாடும் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ - வைரலாகும் அதிகாரபூர்வ அறிவிப்பு..!