ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.கார்த்திக் வாசுதேவன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

மதன் பாண்டியன்,க்ரித்திகா லட்டு,மீனா குமாரி,உமா பத்மநாபன்,யுவராணி,தனலட்சுமி,ரவீனா,திவாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.இந்த தொடருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

தொடரின் நாயகி ரேஷ்மா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிக்கிறார் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.கொரோனவை அடுத்து இந்த தொடரில் அரண்மனை கிளி மோனிஷா நடித்து அசத்தி வருகிறார்.1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை இந்த தொடர் நிகழ்த்தியுள்ளது.

பல திருப்பங்களுடன் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் விரைவில் நிறைவுக்கு வருகிறது.இந்த தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் இன்று நடைபெற்றுள்ளது , இது குறித்து தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.இந்த தொடர் நிறைவடைவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

poove poochudava serial to end soon climax shoot today reshma madhan karthik monisha