சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே

சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் இணையும் WETA டிஜிட்டல்,avatar vfx team weta joins with suriya vetrimaaran in vadivasal movie | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராகவும் ஆகச்சிறந்த நடிகராகவும் படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி ரசிகர்களின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சூர்யா கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டரான விக்ரம் திரைப்படத்தின் இறுதி காட்சியில் சில நிமிடங்களே தோன்றினாலும் தனது ரோலக்ஸ் கதாபாத்திரத்தால் திரையரங்குகளை அதிர வைத்ததார்.

அடுத்ததாக தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜயுடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தை தற்போது இயக்கி வரும் நிலையில், இந்த தளபதி 67 திரைப்படம் லோகேஷ் கனகராஜின் LCUல் இடம்பெறும் என்றால் நேருக்கு நேர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி திரைப்படமாக தளபதி 67 இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

முன்னதாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில், சூர்யா தற்போது நடித்து வருகிறார். பிரம்மாண்டமான திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி வரும் சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு மையப்படுத்தி தயாராகும் வாலிவாசல் திரைப்படத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கிறார். 

கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்களுடன் இணைந்து நடிகர் சூர்யா மாடுபிடிக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மேலும் வாடிவாசல் படத்திற்காக தொடர்ந்து பல விதமான மாடு பிடிக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொண்டும், மாடுபிடி பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

வெகு விரைவில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது வாடிவாசல் திரைப்படத்தின் VFX கிராபிக்ஸ் பணிகளுக்காக ஹாலிவுட் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனமாக அவதார், மார்வெல் திரைப்படங்கள் காட்ஸில்லா மற்றும் கிங்காங் ஆகிய படங்களுக்கு பணியாற்றிய WETA டிஜிட்டல் நிறுவனம் கைகோர்த்து இருப்பதாக தற்போது பிரம்மிக்க வைக்கும் தகவல்கள் வெளி வருகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
 

தயாரிப்பாளராக களமிறங்கும் MSதோனியின் முதல் படம்… அதிரடியாக வந்த அறிவிப்பு இதோ!
சினிமா

தயாரிப்பாளராக களமிறங்கும் MSதோனியின் முதல் படம்… அதிரடியாக வந்த அறிவிப்பு இதோ!

விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!
சினிமா

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர்  இணைந்த பிரம்மிப்பான படைப்பு… ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் ரொமான்டிக்கான GLIMPSE புதிய இதோ!