விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 ப்ரோமோ எப்போது..? அதில் என்னென்ன இருக்கும்..?- செம்ம மாஸாக வந்த ருசிகர தகவல் இதோ

தளபதி 67 ப்ரோமோ குறித்த ருசிகர தகவல்,vijay lokesh kanagaraj in thalapathy 67 movie promo details out now | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் வாரிசு திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி வாரிசு திரைப்படத்தின் ரிலீசுக்கு பிறகு சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளும்படி தெரிவித்தார்.

தளபதி 67 படத்தின் படப்பூஜை  கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜயுடன் மீண்டும் நடிகை திரிஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி 67 படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மேலும் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் மற்றும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோரும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த ப்ரோமோ வீடியோவில் துப்பாக்கி, கத்தி ஆகியவை இடம்பெற்றுள்ளன. 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் வெளியில் காத்திருப்பது போன்ற அந்த ப்ரோமோவில் தளபதி விஜய்யின் மாஸான ஒரு பஞ்ச் டயலாக் இடம்பெற்று இருப்பதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. எது எப்படியோ நீண்ட நாட்களாக காத்திருந்த தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்புகள் அடுத்த ஓரிரு தினங்களில் வெளியாகி சமூக வலைதளங்களை அதிர விட போகின்றன என்பது மட்டும் சாத்தியம்.
 

எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!
சினிமா

எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!

தயாரிப்பாளராக களமிறங்கும் MSதோனியின் முதல் படம்… அதிரடியாக வந்த அறிவிப்பு இதோ!
சினிமா

தயாரிப்பாளராக களமிறங்கும் MSதோனியின் முதல் படம்… அதிரடியாக வந்த அறிவிப்பு இதோ!

விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் பக்கா மாஸ் கேங்ஸ்டர் படம்… மிரட்டலான புது போஸ்டருடன் வந்த அதிரடி அறிவிப்பு!