பொன்னியின் செல்வன் 2 பட புது சர்ப்ரைஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அக நக பாடலின் ரொமான்டிக்கான வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட அக நக பாடல் ப்ரோமோ,ponniyin selvan 2 movie aga naga song promo karthi trisha mani ratnam | Galatta

இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1.  புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கினார் இயக்குனர் மணிரத்னம். அட்டகாசமான வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வனை எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்து கைவிட்ட நிலையில், தனது விடாமுயற்சியால் கனவு படைப்பை நினைவாக்கிய மணிரத்னத்திற்கு உறுதுணையாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஈடு இணையற்ற படத்தை தயாரித்தனர்.

இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ள பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒலிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் பாகம் 1 தாக்கத்தால் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக வெளிவந்த அக நக பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அக நக பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரொமாண்டிக்கான அந்த ப்ரோமோ இதோ…
 

கமல்ஹாசனின் KH234 படத்திற்குள் ARரஹ்மான் எவ்வளவு சீக்கிரம் வந்தார்?- ரகசியங்கள் பகிர்ந்த மணிரத்னம்! வைரல் வீடியோ
சினிமா

கமல்ஹாசனின் KH234 படத்திற்குள் ARரஹ்மான் எவ்வளவு சீக்கிரம் வந்தார்?- ரகசியங்கள் பகிர்ந்த மணிரத்னம்! வைரல் வீடியோ

'பொன்னியின் செல்வன்-ல இந்த SCENE VIDEO SONGல வரும் ஆனா படத்துல வராது'- முக்கிய காரணத்தை தெரிவித்த ஸ்ரீகர் பிரசாத்! வீடியோ உள்ளே
சினிமா

'பொன்னியின் செல்வன்-ல இந்த SCENE VIDEO SONGல வரும் ஆனா படத்துல வராது'- முக்கிய காரணத்தை தெரிவித்த ஸ்ரீகர் பிரசாத்! வீடியோ உள்ளே

அக நக பாடல் உருவான கதையை பகிர்ந்த ARரஹ்மான்... பொன்னியின் செல்வன் 2 பட அசத்தலான பிரத்யேக பேட்டி இதோ!
சினிமா

அக நக பாடல் உருவான கதையை பகிர்ந்த ARரஹ்மான்... பொன்னியின் செல்வன் 2 பட அசத்தலான பிரத்யேக பேட்டி இதோ!