கமல்ஹாசனின் KH234 படத்திற்குள் ARரஹ்மான் எவ்வளவு சீக்கிரம் வந்தார்?- ரகசியங்கள் பகிர்ந்த மணிரத்னம்! வைரல் வீடியோ

கமல்ஹாசனின் KH234 படத்திற்குள் ARரஹ்மான் வந்தது குறித்து பேசிய மணிரத்னம்,Mani ratnam about how early ar rahman involved in kh234 movie | Galatta

தனது திரைப்பயணத்தின் கனவு படைப்பாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று 500 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில், சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க பிரம்மாண்ட திரைப்படமாக உருவாக்கியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்கத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு பரத்வாஜ் ரங்கன் அவர்களோடு சிறப்பு நேர்காணலில் இணைந்த இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நம்மோடு பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில், இப்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணையும் KH234 படத்திற்காக ஸ்கிரிப்ட் பணியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள் வேறு ஒரு நடிகருக்கான படமாக இருந்தாலும் சரி நீங்கள் சில தொழில்நுட்ப கலைஞர்களோடு இணைந்து பணியாற்றுகிறீர்கள் என்று தெரியும். ஸ்ரீகர் பிரசாத் போன்றவர்களோடு, முன்னதாகவே இணைகிறீர்கள். ஏனென்றால் அவர்கள் முன்பே இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? ஏனென்றால் அவர்களுடைய கருத்துகளையும் கேட்டுக்கொண்டு பணியாற்றுகிறீர்கள். அதுபோல எந்த ஒரு புள்ளியில் நீங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை ஸ்கிரிப்ட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள்? என கேட்டபோது, "எவ்வளவு முன்னதாக முடியுமோ அவ்வளவு முன்னதாக… நான் எப்போது ஒரு படம் செய்ய வேண்டும் என உணர்கிறேனோ அப்போது, இவர்கள் இருவரிடமும், ஒளிப்பதிவாளர் கூடவும் பேசி நான் தெளிவாக இருக்கிறேனா அல்லது தெளிவற்ற ஒரு ஐடியாவாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவர்களிடம் சொல்கிறேன். நான் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செய்யக்கூடிய படங்கள் குறித்து கூட அவர்களிடம் என்னால் பேச முடியும். நாங்கள் சாதாரணமாக பேசுவோம் அந்த ஐடியாக்கள் பற்றி கலந்துரையாடுவோம். அவரை (ஏ.ஆர்.ரஹ்மான்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு முன்பே உள்ளே கொண்டு வருவேன்” என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். அட்டகாசமான அந்த ஸ்பெஷல் பேட்டி இதோ…
 

கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த முதல் PAN INDIA படமாக வரும் சிவகார்த்திகேயனின் அயலான்!- செம்ம மாஸ் அப்டேட் இதோ
சினிமா

கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த முதல் PAN INDIA படமாக வரும் சிவகார்த்திகேயனின் அயலான்!- செம்ம மாஸ் அப்டேட் இதோ

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷன் போலீஸ் படமான கஸ்டடி!'- ரொமான்டிக்கான TIMELESS LOVE பாடல் இதோ!
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷன் போலீஸ் படமான கஸ்டடி!'- ரொமான்டிக்கான TIMELESS LOVE பாடல் இதோ!

'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!
சினிமா

'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!