'பொன்னியின் செல்வன்-ல இந்த SCENE VIDEO SONGல வரும் ஆனா படத்துல வராது'- முக்கிய காரணத்தை தெரிவித்த ஸ்ரீகர் பிரசாத்! வீடியோ உள்ளே

பொன்னியின் செல்வன் ராட்சஸ் மாமனே பாடல் குறித்து பேசிய ஸ்ரீகர் பிரசாத்,Sreekar prasad about deleted shots in ponniyin selvan | Galatta

இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

முன்னதாக மக்களின் மனம் கவர்ந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனிடையே நமது கலாட்டா தமிழ் சேனலில் பிரத்தியேக பேட்டி அளித்த படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் அவர்கள் நம்மோடு பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் இடம்பெற்ற ராட்சச மாமனே பாடலின் பின்னணி பற்றி பேசியபோது, “பொன்னியின் செல்வன் 1 படத்திலேயே ஒரு பாடல் இருக்கிறது ராட்சச மாமனே அதில் பார்த்தீர்கள் என்றால் அந்த நடனம் நடந்து கொண்டிருக்கும்போது கார்த்தி உட்காருவார், உட்கார்ந்து த்ரிஷாவை பார்ப்பார். இருவரும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் படத்தில் பார்த்தீர்கள் என்றால் அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்ளவே மாட்டார்கள். வீடியோ பாடலாக வெளியிடும்போது இருவரும் பார்த்துக் கொள்வது போல் வைத்தேன். ஏனென்றால் அது ஒரு வித்தியாசமான அனுபவம். இயக்குனர் அதை எடுத்தார். இருவரும் பார்த்துக் கொள்வது போல் அவர் எடுத்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். இவரை தள்ளி விட்டுக் கொண்டே இருப்பார்கள், மகாராணியை பார்க்கக்கூடாது என பக்கத்தில் இருக்கும் தோழிகள் தள்ளி விட்டுக் கொண்டே இருப்பார்கள். இது ஒரு சாதாரண விஷயம்தான் இதை நாங்கள் பாடலாக வெளியிடும் போது அந்த காட்சியை வைத்தோம், படத்தில் வைக்கவில்லை. உடனே சில பேர் அது படத்தில் இருந்திருக்க வேண்டும் எடுத்து விட்டீர்கள்… தவறாக எடுத்துவிட்டீர்கள் என கேட்க ஆரம்பித்தார்கள். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இந்த காட்சியை படத்தில் வைத்தால் லாஜிக்காக தவறாக இருக்கும். அவர் இங்கேயே பார்த்து விட்டார் என்றால் அதன் பிறகு போய் பார்க்கிற இடத்தில் அவருக்கு அவள் யார் என்று தெரியாதது போல் இருக்கும். அதில் அர்த்தமே இருக்காது. அதனால்தான் இது நீக்கப்பட்டது. இது படத்தின் நன்மைக்காகவே செய்யப்பட்டது. நிறைய பேர் நினைத்துக் கொள்கிறார்கள் படத்தின் நீளத்தின் காரணமாக தான் இது நீக்கப்பட்டது என்று, இதுவும் கூட சொன்னார்கள் படம் நன்றாக இருந்தது இன்னும் கொஞ்சம் காட்சிகள் கூட வைத்திருக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள். அவ்வளவு எளிமையான காரியம் கிடையாது.” என்றார். இன்னும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஸ்ரீகர் பிரசாத் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷன் போலீஸ் படமான கஸ்டடி!'- ரொமான்டிக்கான TIMELESS LOVE பாடல் இதோ!
சினிமா

'வெங்கட் பிரபு - நாக சைதன்யாவின் அதிரடி ஆக்ஷன் போலீஸ் படமான கஸ்டடி!'- ரொமான்டிக்கான TIMELESS LOVE பாடல் இதோ!

'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!
சினிமா

'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!

விஷால் - ஹரி - கார்த்திக் சுப்புராஜ் அதிரடி கூட்டணியில் புதிய படம்... விஷால் 34 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

விஷால் - ஹரி - கார்த்திக் சுப்புராஜ் அதிரடி கூட்டணியில் புதிய படம்... விஷால் 34 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!